ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான சட்ட உத்தரவாதம்
cri
ஷாங்காய் மாநகரில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யும் வரைவுத் தீர்மானம் பற்றிய கருத்துரு ஒன்றை ஷாங்காய் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி அண்மையில் பரிசீலனை செய்தது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை, புகையில்லா பொருட்காட்சியாக உருவாக்க இது வலிமையான சட்ட ஆதரவு அளிக்கக்கூடும். ஷாங்காய் மாநகர சுற்றுலா விதிகளின் திருத்தம் பற்றிய வரைவுத் தீர்மானத்தையும் ஷாங்காய் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி பரிசீலனை செய்தது. நகரின் பரப்புரை, பயணிகளை ஈர்ப்பது, உபசரிப்பு சேவை முதலியவை பற்றிய விதிகள், இந்நகரின் சுற்றுலா துறை, உலகப் பொருட்காட்சிக்குச் சேவை செய்வதற்கு சட்ட ஆதாரம் வழங்கும்.
|
|