• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-21 11:22:10    
திபெத் மக்களின் புதிய வாழ்க்கை

cri

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், திபெத்தில் அரசியலும் மதமும் ஒன்றிணைந்த நிலப்பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பு முறை நடைமுறையில் இருந்தது. திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்கள், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை உரிமையாளர்களின் கடுமையான அடக்கு முறையையும் கொடுமைகளையும் அனுபவித்தனர். 1959ம் ஆண்டு திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை முழுமையாக நீக்கப்பட்டது. திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்கள், விடுதலை பெற்றனர். அவர்கள், முன்கண்டிராத இன்பமான புதிய வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், திபெத்தில் அரசியலும் மதமும் ஒன்றிணைந்த நிலப்பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பு முறை நடைமுறையில் இருந்தது. பழைய திபெத்தில், மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்குக் குறைவான அதிகாரிகள், பிரவுகள், உயர்நிலை துறவிகள் முதலிய பண்ணை அடிமை உரிமையாளர்கள், திபெத்தின் 90 விழுக்காட்டுக்கு அதிகமான நிலத்தையும் உற்பத்தி சாதனங்களையும் கொண்டிருந்தனர். அடிமை மக்களுக்கு சுதந்திரம் இல்லை. அவர்களை அடிமை உரிமையாளர்கள் தங்களது தனிப்பட்ட சொத்தாக மாற்றியிருந்தனர். அவர்களை தங்களுடைய விருப்பம் போல், வாங்கவும், விற்பனை செய்யவும், மாற்றிக் கொடுக்கவும், அன்பளிப்பாக வழங்கவும், பரிமாறிக் கொள்ளவும் கூடிய பொருட்களாகவே கருதினர். திபெத்திலுள்ள ri ka ze பிரதேசத்தின் jiang zi மாவட்டத்தில் இதுவரையிலும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை உரிமையாளரின் பண்ணைத் தோட்டம் இன்னமும் நிலவுகின்றது. அது, pa la பண்ணைத் தோட்டமாகும். அப்போதைய வரலாற்றை அது பதிவு செய்துள்ளது. பழைய திபெத்திலிருந்த பிரபுகளுக்கும் அடிமைகளுக்குமிடையிலான முழுமையாக வேறுபட்ட வாழ்க்கையை இது வெளிப்படுத்துகிறது. pa la பண்ணைத் தோட்டத்தின் கதையை கூறும் Phurbu Tsering அறிமுகப்படுத்தியதாவது

Pala குடும்பத்துக்கு 300க்கு மேலான ஆண்டுகால வரலாறு உண்டு. இக்குடும்பம் திபெத்தில் முக்கிய செல்வாக்குடைய குடும்பமாகும். அதற்கு Jiang zi மாவட்டம், லாசா நகர், bai lang மாவட்டம், ya dong மாவட்டம், shan nan முதலிய பிரதேசங்களில் மொத்தம் 37 பண்ணை தோட்டங்களும் 12 மேய்ச்சல் நிலங்களும் 30 ஆயிரம் ஹெக்டர் நிலங்களும் 3000க்கும் அதிகமான அடிமைகளும் உண்டு. Pala குடும்பத்தின் பண்ணைத் தோட்ட கட்டிடங்களின் பரப்பளவு 5000க்கு சதுர மீட்டருக்கு அதிகமாகும்.

1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பழைய நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை தூக்கி எறியப்பட்டது. அடிமைகள் நிலங்களையும் விலங்குகளையும் உற்பத்திச் சாதனங்களையும் பெற்றனர். அவர்கள் சமூகத்தின் உரிமையாளராகவும் நிலங்களின் உரிமையாளராகவும் தமது வாழ்க்கையை தாங்களே தீர்மானிப்பவராகவும் மாறினர். லட்சக்கணக்கான அடிமைகள், விடுதலை பெற்றனர். பழைய திபெத்தில் Ban jiu long bu கிராமத்திலுள்ள பல கிராமவாசிகள், pa la பண்ணைத் தோட்டத்தின் அடிமைகளாவர். இன்று அவர்கள், அமைதியான மற்றும் இன்பமான புதிய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.  

பழைய திபெத்தில் மூதாட்டி Drolmaவும் அவரது கணவனும் pa la பண்ணைத் தோட்டத்தின் அடிமைகளாக இருந்தனர். இன்றைக்கு இருவரும் அவர்களது தலைமுறையினரும் இன்பமாக வாழ்கின்றனர். உடல் நலம் இன்றைய இரு முதியோர்களின் மிகப் பெரிய விருப்பமாகும். முதியோர் இருவரும், இன்றைய இன்பமான வாழ்க்கையை மேலும் பல ஆண்டுகள் அனுபவிக்கலாம். இப்போதைய வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், மூதாட்டி Drolma மகிழ்ச்சியுடன் கூறியதாவது

1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு, நாங்கள், அடிமை உரிமையாளர்கள் பயன்படுத்திய வாழ்க்கைப் பொருட்களையும் திபெத் எருமைகளையும் பெற்றோம். நாங்கள் மிக மகிழ்ச்சியடைந்தோம்.

50 ஆண்டுகள் கடந்து விட்டன. முந்திய பண்ணை அடிமைகள், இன்றைய சமூகத்தின் உரிமையாளராக உள்ளனர். அவர்கள் முதியோராக இருந்த போதிலும், திபெத் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற வரை பங்காற்றி வருகின்றனர். 73 வயதான Yeshe Blo Gros இப்போது, லாசா நகரிலுள்ள chen guan பிரதேசத்தின் xia sha su குடியிருப்புப் பகுதியின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினராவார். பழைய திபெத்தில், அவர் பிரபுக்களின் பண்ணைத் தோட்டத்தில் ஆடுமாடுகளை மேய்ப்பவராக இருந்தார். திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், இவர் அடிமை வாழ்க்கையிலிருந்து விலகி chen guan பிரதேசத்திலுள்ள அடி மட்ட நிலை ஊழியராக மாறினார். மூன்று ஆண்டுகளுக்கு முன், அவர் chen guan பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதியவர் Yeshe Blo Gros கூறியதாவது

பழைய திபெத்திலிருந்த அடிமைகளின் வாழ்க்கையை பற்றி எனக்கு நன்கு தெரியும். பழைய திபெத்தில், எனக்கு எந்த உரிமையும் இல்லை. இப்போது எனக்கு பல உரிமைகள் உண்டு. மக்கள், நாட்டின் உரிமையாளராக மாறினர். நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயகச் சீர்திருத்தம், திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது. கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின், அரசியல் பொருளாதாரம், பண்பாடு முதலிய பல்வேறு துறைகளில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. சீனச் சமூகமும் பொருளாதாரமும் மேலும் வளர்வதுடன், திபெத் மேலும் பரந்த வளர்ச்சி வாய்ப்புகளை வரவேற்கும்.