Sun Xi Mei எனும் இளம் பெண், Wu Han நகரின் ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார். அவரது ஊர், He Bei மாநிலத்தின் Ling Shou மாவட்டத்தின் Qiu Shan கிராமமாகும். வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது வாழ்க்கை எளிமையானது. ஆனால், அவர் நூல்களை வாங்கி, சேகரிப்பதை நேசிப்பவர். கடந்த சில ஆண்டுகளாக, அவர் சுமார் ஆயிரம் புத்தகங்களை சேகரித்துள்ளார். தனக்கென அல்லாமல், தனது ஊரான Qiu Shan கிராமத்தில் வாழும் விவசாயிகளுக்காக அவர் இப்புத்தகங்களைச் சேகரித்தார். பல்வேறு சமூகத் துறையினரின் உதவியுடன், அவர் சிறு நூலகம் ஒன்றை நிறுவினார். சுமார் 40 சதுர மீட்டர் பரப்பளவுடைய ஒரு அறையில், புத்தகங்கள் சுத்தமாக பத்துக்கு மேலான புத்தக மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதுதான் Qiu Shan கிராமத்தின் நூலகம். சிறிய அறையில் புத்தகங்களை இரவல் வாங்க வந்த விவசாயிகள் அதிகம் என்பதை செய்தியாளர் கண்டார்.
"இங்கே அடிக்கடி வருகின்றேன். வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். புத்தகங்களைப் படிப்பதன் மூலம், வளர்ப்புப் பணியில் தோன்றிய சில பிரச்சினைகளை சொந்தமாக கையாள முடியும். இந்நூலகம், இதில் பெரும் பங்காற்றியுள்ளது" என்று கிராமவாசி Cao Yin Gui செய்தியாளரிடம் கூறினார். "கடந்த ஆண்டின் செப்டம்பர் திங்களில் இந்நூலகம் திறக்கப்பட்டது. நூலகத்தில், புத்தகங்களின் எண்ணிக்கை, ஈராயிரம் முதல் ஐந்து ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. அதிக வகை நூல்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வேளாண் துறை அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய புத்தகங்களும் வரலாற்றுக் கதைகள் தொடர்பான புத்தகங்களும் இன்னப்பிறவும் உள்ளன" என்று இந்நூலகத்தின் நிர்வாகி Hu He Xiang கூறினார்.
5000 புத்தகங்கள் அதிகமில்லை என்ற போதிலும், புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்த விவசாயிகளைப் பொறுத்த வரை இப்புத்தகங்கள் மிகவும் மதிப்புள்ளவை. Sun Xi Mei என்பவரே இந்நூலகத்தை நிறுவியவர். சிறு வயதிலிருந்தே Sun Xi Mei சுறுசுறுப்பாக கல்வி பயின்றார். அவர் நூல்களை வாசிப்பதை மிகவும் நேசிக்கின்றார். ஆனால், குடும்பத்தின் வறுமை நிலைமையினால், அவர் அதிக நூல்களை வாங்க முடியவில்லை. அறிவை வளர்க்கும் ஆசையின் காரணமாக, சிறு வயதிலிருந்தே ஒரு நூலகத்தை நிறுவும் கனவு அவருக்கு ஏற்பட்டது. சளையாத முயற்சியுடன் படித்ததால், தேர்வு மூலம், He Bei மாநிலத்தின் தலைநகரில் உள்ள மேனிலைப் பள்ளியில் சேர்ந்து Sun Xi Mei தொடர்ந்து கல்வி பயின்றார். கிராமத்தில் குழந்தைகளின் மாதிரியாக அவர் மாறினார். பள்ளியின் நூலகத்தில் அவர் பல்வேறு நூல்களைப் படிக்க முடியும். ஆனால், அவரது ஊரில் குழந்தைகள் அதிக புத்தகங்களை படிக்க முடியவில்லை, இது பற்றி அவர் வருத்தம் அடைந்தார்.
மேனிலைப் பள்ளியின் இரண்டாவது ஆண்டில், கிராமவாசிகளுக்காக நூலகம் ஒன்றை நிறுவும் எண்ணம் Sun Xi Meiக்கு ஏற்பட்டது. ஆனால், மேனிலைப் பள்ளி திங்களுக்கு வழங்கிய நிதியுதவியைச் சார்ந்தே, அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். புத்தகங்களை வாங்கும் பணத்தை எங்கிருந்து பெறுவது என்ற பிரச்சினையைத் தீர்க்க அவர் வழி தேடினார். ஒரு நாள், பள்ளித் தோட்டத்தில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில், மாணவர்களால் தூக்கியெறிந்த காலி புட்டிகளை அவர் கண்டார். பணம் திரட்டும் வழிமுறை அவருக்கு கிடைத்தது. அப்போது முதல், அவர் விற்கப்படக்கூடிய கழித்து ஒதுக்கப்பட்ட பொருட்களை சேகரிப்பதை பழக்கமாக்கிக் கொண்டார். குப்பைத் தொட்டிகளில் கழித்து ஒதுக்கப்பட்ட பொருட்களை எடுத்த போது, அவர் துர் நாற்றத்தையும் அழுக்கையும் சகி்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இது மட்டுமல்ல, பிறரின் தவறான எண்ணத்தையும் அவர் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றைப் பொருட்படுத்தாமல், தமது ஊரில் ஒரு நூலகத்தை நிறுவும் கனவுக்காக அவர் முயற்சி மேற்கொண்டார்.
|