நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், சீன வங்கித் துறையின் நாணய நிறுவனங்களது கையிருப்புத்தொகை நிதானமாக வளர்ந்து வருகிறது. 2009ம் ஆண்டின் ஜூன் திங்கள் இறுதியில், சீன வங்கித் துறையின் மொத்த கையிருப்புத்தொகை 73 இலட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. இது, 1978ம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை போல் 388 மடங்காகும்.ஆண்டுக்கு சராசரி, இம்மதிப்பு, 21.2 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்று சீன வங்கித் துறைக்கான கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் 24ம் நாள் அறிவித்தது.
தவிர, சீன வங்கித் துறையின் வெளிநாட்டுத் திறப்பு நிலைமை தொடர்ந்து உயர்ந்துள்ளது. 2008ம் ஆண்டின் இறுதி வரை, 46 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 196 வங்கிகள், சீனாவில் கிளைகளை உருவாக்கின.
|