• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 16:33:11    
பார்வையை பாதிக்கும் வாதம்

cri
உடல் ஒரு வியப்பான இயந்திரம். கிட்டத்தட்ட இன்றைய கணினி போல. ஓர் இயந்திரத்தின் செயல்பாட்டில் சில பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதரப் பகுதிகள் கூட்டாக சேர்ந்து இயக்கத்தை சீராக்குகின்றன. அதைபோல தான் நமது உடலும். உடலின் இயக்கத்திற்கு இதயம், மூளை, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவற்றில் மூளையும் இதயமும் முதன்மையான இடத்தை பெறுகின்றன. உடலிலுள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டளையின்படி தான் நிறைவேற்றப்படுவதால் மூளையை உடலின் கட்டளையதிகாரி என்று கூறலாம். இதயத்தின் செயல்பாடுகள் கூட அப்படிதான். ஆனால் மூளை செயல்பட இதயத்திலிருந்து செல்லுகின்ற இரத்தம் மிக முக்கியமாகும். மூளைக்கு செல்லும் இரத்தம் ஏதாவது வகையில் தடைப்பட்டால் மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைக்க வேண்டிய இரத்தம் தடைப்பட்டு சில பகுதிகள் செயலிழக்கும். வேறுசில சேதமடையும். இத்தகைய பாதிப்புக்குள்ளான மூளையின் பகுதி, எந்த உடற்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி வந்ததோ அவை செயலிழந்து போகின்றன. இதனை Stroke அதாவது வாதம் என்று கூறுவர். இதனை பாரிச வாதம், மூளை வாதம் என்றும் பலர் கூறுகின்றனர். உடலின் ஏதாவது பகுதிக்கு இரத்தம் போகாமல் இருப்பதால் உருவாகும் நிலையை வாதம் என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ischemic stroke அதாவது இரத்த குழாய் அடைப்பு என்று கூறுகின்றனர். இதுவும் ஒருவகை மூளை வாதம் தான்.

இவ்வாறு மூளைக்கு இரத்தம் போகும் குழாயில் அடைப்பால் வரும் மூளை வாதம் பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இந்த இரத்தக் குழாய் அடைப்பை உருவாக்கும் இரண்டு மாறுபட்ட மரபணு கூறுகளை பல மில்லியன் மக்கள் கொண்டிருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த மரபணு கூறுகள் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய் அடைப்பின் ஆபத்தை உருவாக்குகிறது என்பது தொடர்பாக நடத்தப்பட்டிருக்கும் முயற்சிகளில் இது முதல் ஆய்வாகும். வாதத்தின் கண்டுபிடிப்பு, தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான திசைகளில் இந்த ஆய்வு புதிய அணுகுமுறைகளை கொண்டுவரும் என்று புதிய பிரிட்டன் மருத்துவ இதழின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வழிநடத்திய Texas பல்கலைக்கழகத்தின் Eric Boer winkle மற்றும் அவரது ஆய்வாளர்கள் இருபதாயிரம் பேரின் DNA எனப்படும் மரபணு மூலக்கூறுகளை ஆராய்ந்ததில் 1,544 பேருக்கு மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய் அடைப்பு நோய் இருந்ததை அறியவந்தனர். மூளை காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட NINJ2 மரபணுவோடு தொடர்புடைய குரோமசோம் 12 க்கு அருகிலுள்ள இரண்டு மரபணு கூறுகள் மாறுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு முடிவுகள் வாதம் பற்றிய தடுப்பு திட்டத்தில் முழுமையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்றாலும் உயிரின அமைப்பு முறையில் வாதத்தை தடுக்கின்ற புதிய சிகிச்சை முறைகளை ஆராயும் அறிவியல் அறிஞர்கள், இந்த ஆய்வு முடிவை கவனத்தில் கொண்டு செயல்படுவர் என்று இந்த ஆய்வுக்கு உதவி செய்த அமெரிக்க நரம்பியல் கோளாறு மற்றும் வாத தடுப்பு நிறுவனத்தின் துணை இயக்குனர் Walter Koroshetz தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக, இரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் வாதம் மூளையின் சில பகுதிகளை முற்றிலுமாகவோ, ஓரளவோ சேதப்படுத்தும். அந்த சேதங்கள் உடலின் செயல்பாடுகளை கட்டுபடுத்தும் பல பகுதிகளை பாதிக்கும். குறிப்பாக இது கண்பார்வையை பாதிக்கக்கூடியது. மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள 60 விழுக்காடு நோயாளிகள் ஏதாவது ஒருவித்தில் பார்வை குறைபாடு உடையவர்களாக உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்ட்டவர்கள், தங்களுக்கு விருப்பமான இசையை கேட்டால் பார்வை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகப் பதிப்பில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

Visual Neglect அதாவது பார்வை புறக்கணிப்பு என பொதுவாக அறியப்படுகின்ற இந்த குறைபாடு மூளையிலுள்ள பார்வை, கவனம் செலுத்துதல் மற்றும் செயல்பாடு தொடர்பான பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளால் உருவாகின்றன. பாதிப்புக்கள் மூளையின் வலதுபுறத்தில் ஏற்பட்டால், இடதுபுறத்திலுள்ள பொருட்களை பார்ப்பதில் இந்த குறைபாடு ஏற்படும். லண்டன் இம்பீரியல் கல்லூரி, பிர்மிங்காம் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இத்தகைய பார்வை குறைபாடு உடையவர்கள், அவர்களுக்கு விருப்பமான இசையை கேட்பதன் மூலம் இக்குறைபாடு நீங்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு இரத்த குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு தங்களது பார்வையில் சில குறைபாடுகளை அனுபவித்து வந்த மூன்று பேரை ஆராய்ந்தனர். விரும்பிய மற்றும் விரும்பாத இசையை கேட்பது, அமைதியில் இருப்பது என மூன்று விதங்களில் அவர்கள் சோதனை செய்யப்பட்டனர். விரும்பிய இசையை கேட்டபோது பார்வை செயல்பாடுகள் குறைந்திருந்த மூளையின் பகுதிகளில் வண்ண வடிவங்கள் மற்றும் சிகப்பு ஒளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதை மூளை வரிமம் செய்த ஆய்வாளர்கள் கண்டனர். ஆனால் அவர்கள் விரும்பாத இசையை கேட்டபோதோ, அமைதியாக இருந்துபோதோ மூளையின் அப்பகுதிகளில் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. தங்களுக்கு விருப்பமான இசையை கேட்டபோது பார்வையுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளில் ஏற்பட்ட சாதகமான தூண்டுதல் புறக்கணிக்கப்பட்ட பார்வை திறனை வளர செய்கிறது. எனவே பார்க்கும் தன்மை இழந்த மூளையின் பகுதியில் காணப்படும் இந்த தூண்டுதல் தான் பார்வை குறைபாடுகளை திரும்ப பெற உதவுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை வழிநடத்திய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நரம்பு அறிவியல் மற்றும் உளநலப் பிரிவை சேர்ந்த டேவிட் சோடோ, இதுபோன்ற உணர்வுகளின் தூண்டுதல்களை கொண்டு பார்வை புறக்கணிப்பை குணப்படுத்தும் மேலதிக முறைகள் உருவாக்கப்பட வேண்டும். இசை சாதகமான துண்டுதலை ஏற்படுத்தி மூளையின் பார்வை புறக்கணிப்பு பகுதிகளின் செயல்பாடுகளை சுண்டிவிடுவது போன்று இன்னும் பல முறைகளை ஆய்ந்து உருவாக்கி பார்வை புறக்கணிப்பை நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளார்.