• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 15:18:47    
சீன அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான வளர்ச்சி

cri

இன்றைய நிகழ்ச்சியில் சீன மக்கள் குடியரசு நிறுவபப்ட்ட 60 ஆண்டுகளில், அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான வளர்ச்சி பற்றிக் கூறுகின்றோம்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. மக்களின் உடை, உணவு, உறைவிடம், போக்குவரத்து, முதலிய துறைகளுடன் அறிவியல் தொழில் நுட்பம் இணைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டின் 40, 50ம் ஆண்டுகளில், பின்டைந்த வேளாண் உற்பத்தி வழிமுறையாலும், இயற்கைச் சீற்ற பாதிப்பினாலும், சீனாவில், முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்கள் கடும் பற்றாக்குறையாக இருந்தன. உணவுப் பிரச்சினை சீனா எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக மாறியது.
அப்போது, தானிய விளைச்சலை உயர்த்தும் வகையில், உயர் விளைச்சல் தரும் நெல்லை வளர்க்க சீனாவின் நெல் நிபுணரான Yuan Longping முடிவு செய்தார். எனவே, உலக சிக்கல் என்று கருதப்படும் கலப்பு நெல் ஆய்வில் அவர் கவனம் செலுத்தத் துவங்கினார்.

கலப்பு மேம்பாட்டை இந்த நெல் கொள்வதால் எனக்கு நம்பிக்கை இருந்தது. தானிய பயிர்களின் விளைச்சல் அதிகரிப்புக்கு அறிவியல் முன்னேற்றம் துணைபுரியலாம் என்று அவர் கூறினார்.

1964ம் ஆண்டு முதல், 1973ம் ஆண்டு வரையான 9 ஆண்டுகளில், ஆயிரத்துக்கு அதிகமான பரிசோதனைகளை Yuan Longping மேற்கொண்டார். கலப்பு நெல்லின் விளைச்சல் சாதாரண நெல்லை விட 20 விழுக்காடாக அதிகரிப்பதை பரிசோதனை எடுத்துக்காட்டியது. கலப்பு நெல் வளர்ப்பு தொழில் நுட்பம் பெருமளவு பயன்படுத்தப்பட்டதுடன், சீன நெல் வளர்ப்பு அளவும் புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைத்தது. உலகில் நெல் கலப்பு மேம்பாட்டை வெற்றிகரமாக பயன்படுத்திய அறிவியலாளராக Yuan Longping மாற்றியுள்ளார்.
இதற்கு பின், புதிய ரக, உயர் விளைச்சல் தரும் உயர் ரக நெல்லை அவர் ஆய்வு செய்யத் துவங்கினார். பல அறிவியல் பரிசோதனைகளின் மூலம், மேம்பட்ட கலப்பு நெல்லின் ஒரு மூ பரப்பின் விளைச்சல் படிப்படியாக உயர்ந்து, 800 கிலோகிராமை எட்டியது.

கலப்பு நெல் ஆய்வு மாபெரும் சாதனைகளைப் பெற்றதால், சீனாவின் மொத்த நெல் விளைச்சல் சுமார் 60 கோடி டன்னுக்கு உயர்ந்தது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டதோடு, உலக தானிய உற்பத்தியில் அற்புதத்தை சீனா உருவாக்கியது. முழு உலகின் 7 விழுக்காட்டு விளை நிலங்களை கொண்டு உலகின் 22 விழுக்காட்டு மக்களுக்கு தேவையான தானிய அள சீனா நிறைவேற்றியுள்ளது. தவிர, சீனாவின் கலப்பு நெல் தொழில் நுட்பம் இந்தியா, வியட்நாம் ஆகிய 20க்கு அதிகமான நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பரவியது.


சீனாவில், Yuan Longping போல் பல அறிவியலாளர்கள் உள்ளனர். அவர்களது அறிவியல் தொழில் நுட்பங்கள் உற்பத்தி ஆற்றலை மாற்றி, நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு உதவியுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளிப்பதை இவை உணர்த்துகின்றன.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட துவக்கம் முதல், அறிவியல் தொழில் நுட்ப பணியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சித் திட்டத்தை சீனா சிறப்பாக இயற்றியது.

1 2