1979ம் ஆண்டு, சீனாவில் காப்பீட்டுத் துறையின் அலுவல் மீட்டெடுக்கப்பட்டது முதல், இதுவரை, சீனக் காப்பீட்டுச் சந்தையின் அளவு, சுமார் 2000 மடங்கு அதிகரித்தது. சீனா, புதிதாக வளரும் காப்பீட்டுத் துறை வல்லரசாக மாறியுள்ளது என்று சீனக் காப்பீட்டுக் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய புள்ளிவிபரம் அறிவித்தது.
நவ சீனாவின் காப்பீட்டுத் துறை, 1949ம் ஆண்டு அக்டோபர் திங்கள் துவங்கியது. ஆனால், வரலாற்றுக் காரணங்களால், இது 20 ஆண்டுகாலம் இடை நிறுத்தப்பட்டது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக்குப் பின், இத்துறை, பன்முகங்களிலும் மீட்டெடுக்கப்பட்டது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது முதல், இதுவரை, ஆண்டுதோறும் காப்பீட்டுத் துறை, சுமார் 30 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. அது, தேசியப் பொருளாதாரத்தில், மிக விரைவாக வளரும் துறைகளில் ஒன்றாகும் என்று புள்ளிவிபரம் காட்டியது.
|