தாய்ஷான் மலை, ஷான்தூங் மாநிலத்தின் மத்தியப் பகுதியிலுள்ள தை ஆன் நகரின் வடப்பகுதியில் உள்ளது. அதன் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு வரை, சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு உண்டு. தெற்கிலிருந்து வடக்கு பகுதி தொலைவு 50 கிலோமீட்டராகும். யூஹுவாங்திங் மலைமுகடு, அதன் முக்கிய மலைமுகடாகும். 117.6 டிகிரி கிழக்கு நில நிரைக்கோட்டிலும், 36.16 டிகிரி வட நில நேர்க்கோட்டிலும் அமைந்துள்ளது. இந்த மலை, கடல் மட்டத்திலிருந்து 1545 மீட்டர் உயரம் கொண்டது.
1982ம் ஆண்டு, அது, சீன அரசவையால், சீனாவின் முக்கிய புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. 1987ம் ஆண்டு, அது, யுனெஸ்கோவால், உலக மரபுச் செல்வ பட்டியலில் சேர்க்கப்பட்டது. அது, இயற்கை, பண்பாட்டு மரபுச் செல்வம் கொண்ட உலகப் புகழ்பெற்ற மலையாகும்.
அங்கு, 156 மலைகள் மற்றும் 138 மலைமுகடுகளும், 72 புகழ்பெற்ற குகைகளும், 72 சிறப்பான அற்புதபாறைகளும், பல பழங்கால மரங்களும், பல ஆயிரம் தொல்பொருட்களும் உள்ளன. அங்குள்ள பல காட்சி தலங்கள், சீன அரசவையால், சீனாவின் முக்கிய தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
|