• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-25 15:21:54    
சீனாவின் மென்மேலும் முக்கிய பங்கு

cri
இவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டாகும். மேலும் சீனாவின் தூதாண்மை பணி துவங்கிய 60வது ஆண்டாகும். கடந்த 60 ஆண்டுகளில், சீனா பல்வேறு நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொண்டு பொறுப்பான மனப்பான்மையுடன் பல்வகை சர்வதேசச் சர்ச்சைகளைத் தீர்க்க பங்காற்றியுள்ளது. சீனா, உலகின் அமைதி, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்காக முக்கிய பங்காற்றியது. சீனாவின் தூதாண்மை இலட்சியம், நாட்டின் திறனை வலிமையுடன் முன்னேற்றி வருகிறது. சர்வதேசத்தில் சீனாவின் பங்கு மென்மேலும் முக்கியமாகியுள்ளது.
1949ம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் நாள், சீன முன்னாள் தலைவர் mao Zedong சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதை அறிவித்தார். அதேவேளை, சமமான, ஒன்று மற்றதுக்கு நலன் தந்த, பிற நாடுகளின் உரிமை பிரதேச மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கின்ற நாடுகளுடன் சீனா தூதாண்மையுறவை நிறுவ விரும்புகிறது என்றும் அவர் அறிவித்தார். 60 ஆண்டுகளில், சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை, 18இலிருந்து 171ஆக அதிகரித்தது. உலகில் எங்கும் சீனாவின் நண்பர்கள் இருக்கின்றன நிலை ஏற்பட்டது.
சீனாவுக்கு, பல்வேறு பெரிய நாடுகளுக்குமிடையிலான உறவு, பொதுவாக முன்னேறி வருகிறது.
அண்டை நாடுகளுடனான தூதாண்மையுறவு, சீன தூதாண்மை பணியின் மிக முக்கிய அம்சமாகும். கடந்த 60 ஆண்டுகளாக,  அண்டை நாடுகளுடனான நட்பு ஒத்துழைப்புறவு வளர்ந்து வருகிறன்றது. சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சியெ ச்சு கூறியதாவது,
உரை 1
சீனா ஆசியாவில் அமைந்துள்ள நாடாகும். அண்டை நாடுகளுடனான தூதாண்மையுறவை, சீனா முதலிடத்தில் வைக்கிறது. கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், அமைதிச் சக வாழ்வுக்கான பஞ்ச சீல கோட்பாடுகளை, சீனா மியன்மார் மற்றும் இந்தியாவுடன் கூட்டாக முன்வைத்தது. இக்கோட்பாடு, சர்வதேச சமூகம் பொதுவாக கடைபிடிக்கின்ற பொதுவான கோட்பாடாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக, அண்டை நாடுகளுடன் நட்பாக பழகி கூட்டாளியாக மாறுவது என்ற கோட்பாட்டையும் சீனா முன்வைத்துள்ளது என்று அவர் கூறினார்.
தவிரவும், ஜப்பான், இந்தியா, தென்கொரியா, வியட்நாம், மங்கோலிய முதலிய நாடுகளின் மிக பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது.
நவ சீனா நிறுவப்பட்ட பின், குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி துவங்கிய பின், சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், சீனா முக்கிய பங்காற்றியது. உலகளாவிய பிரச்சினையைத் தீர்ப்பது, உலக அமைதியைப் பேணிக்காப்பது முதலியவற்றில் சீனா ஆக்கப்பூர்வ பங்கு ஆற்றி வருகிறது. பலதரப்பட்ட தூதாண்மை குறித்து பேசுகையில், யாங் ச்சியெ ச்சு இவ்வாறு கூறினார்.
தற்போது, சர்வதேசச் சமூகத்துடனான தொடர்பு மென்மேலும் நெருக்கமாகியுள்ளது. சீனாவின் தகுநிலையும் செல்வாக்கும் உயர்ந்து வருகின்றது. சீனா முன்வைத்த முன்மொழிவுகள், சர்வதேசச் சமூகத்தில் பரந்த கவனம் மற்றும் பாராட்டுகளைப் பெற்றன. இது பற்றி, யாங் ச்சியெ ச்சு கூறியதாவது,
உரை 3
அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் 20 நாடுகள் குழுத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். தலைமையமைச்சர் வென்சியாபாவ், ஆசிய-ஐரோப்பிய உச்சி மாநாட்டிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சவார்த்தையிலும் கலந்து கொண்டார். உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி, சர்வதேச நிதி முறைமையின் சீர்திருத்தம் முதலியவற்றை சீன தலைவர்கள், உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் விவாதித்தனர். சளிக்காய்ச்சல் ஏ நோய், காலநிலை மாற்றத்தின் அறைகூவல் முதலியவற்றை சமாளிப்பதில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்சடு வருகிறது. சீன பொருளாதாரத்தின் விரைவான நிதானமான அதிகரிப்பு, சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனாவின் முயற்சி ஆகியவை, சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கையை வழங்கின. உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதில், சீனா முக்கிய பங்காற்றுகிறது என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் சீனாவின் தூதாண்மை இலட்சியம் குறித்து யாங் ச்சியென் ச்சு நிறைந்த நம்பிக்கை தெரிவித்தார். சீனா, அமைதி வளர்ச்சிப் பாதையை மேற்கொள்ளும். நிரந்த அமைதியான கூட்டு செழுமையான இணக்கமான உலகத்தை உருவாக்க சீனா சளையாத முயற்சியை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.