• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-27 15:45:59    
Yun meng மலை

cri

Yun meng மலை, mi yun வட்டம் மற்றும் huai rou வட்டம் இணைந்த பகுதியாகும். பண்டைகாலத்தில், இது yun கனவு மலை என அழைக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு, 2208 ஹெக்டர் ஆகும்.
Yun meng மலை, பசுமையான மலைகள், தெளிந்த நீர், பழம் பெரும் சுவர் வாய்ந்த இயற்கைக் காட்சி மண்டலமாகும்.


2003ம் ஆண்டு, Yun meng மலை, சீனத் தேசிய நிலையான இயற்கைக் காட்சி மண்டலம், சீனத் தேசிய மலை இயற்கைக் காட்சி மண்டலம் என அழைக்கப்பட தொங்கியது. காலையில் தோன்றும் கதிரவன், மாலையில் உதிக்கும் நிலவு, சோலையில் மலஞம் பூக்கள், வானத்தில் மிதக்கும் மேகங்கள், நீல ஆடை போன்ற வான்ப்பரப்பு, வானவீதியில் இரவில் உலா வரும் நிலா, முத்துகளைப் பரப்பியது போன்ற விண்மீன்கள், இவை அனைத்தும் இயற்கை தரும் அழகுக்காட்சிகள் அல்லாவா?இவற்றை கண்டு பார்த்து, அழகைப் பருகி மனமகிழ்ச்சி கொண்ளுங்கள்.


இதில், பல்வேறு சேவை வசதிகள் உள்ளன. இதன் நாலா பக்கமும் வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட அமைதியான கட்டடம் இருப்பது மட்டுமல்ல, உணவகம், விடுதி, கூட்டம் நடத்தும் அறைகள் என வசதிகள் வாய்ந்த ஒட்டுமொத்த மாளிகை உள்ளது. சுற்றுலாப் பயணிகள், அருமையான உள்ளூர் men zi வகைகளைச் சாப்பிடலாம். இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே சுவையான men ziயை உண்டு மகிழலாம்.


சுவையான உணவு :இங்கு கிராமப்புறத்தில் உணவுகள் சிறப்பு உணவுகளாகும். இது சுவையானது மட்டுமல்ல, இதன் விலையும் குறைவாக இருக்கின்றது. இந்த மலைக்குச் சென்றால், கிராமப்புறத்தில் உணவுகளைச் சாப்பிடுவது உறுதி.
விளையாட்டு:இங்கு மலையை ஏற்றிச்செல்வது ஒரு சிறந்த விளையாட்டாகும். இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், மலையை ஏற்றிச்சென்று இன்புறுவதை விரும்புகின்றனர்.