• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-27 11:49:26    
உள்மங்கோலியா முதல் திபெத் வரை

cri
மாரத்தான் அதாவது தொலைதூர ஓட்ட வீரர் Ren Weidong சீனாவின் வடக்கு பகுதியிலிருந்து தென்மேற்கு பகுதிக்கு தொலைதூரம் ஓட முடிவு செய்துள்ளார். சீனாவின் வடக்கிலுள்ள உள்மங்கோலியாவின் தலைநகரான ஹெஹாட்டிலிருந்து சீனாவின் தென்மேற்கிலுள்ள திபெத்தின் தலைநகரான லாசாவுக்கு இந்த கோடைகாலத்தில் ஓட அவர் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற 12 சர்வதேச தொலைதூர ஓட்டப்போட்டிகள் அனைத்திலும் கலந்துகொண்டு பெருமை பெற்றவர் இவர். இவ்வாண்டின் துவக்கத்தில் ஹெஹாட்டிலிருந்து பெய்ஜிங்கிற்கு ஆறு நாட்களில் ஓடி புகழ்பெற்றுள்ளார். ஹெஹாட் முதல் லாசா வரையான இந்த தொலைதூர ஓட்டத்தை ஜூன் 6 ஆம் நாள் தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் நாள் இவர் முடிக்க இருக்கிறார். 3, 974 கிலோமீட்டர் தொலைதூரப் ஓட்டமான இது, உள்மங்கோலியாவில் தொடங்கி வடமேற்கு சீனாவின் Shannxi, Ningxia Hui தன்னாட்சி பிரதேசம், Gansu, Qinghai ஆகிய மாநிலங்கள் வழியாக திபெத்தில் முடிவு பெறுகிறது. பொதுவாக சமவெளிகளில் உள்ளதை விட பாதியளவே ஆக்ஸிஜன் உள்ள கடல் மட்டத்திலிருந்து 4,000 முதல் 6,000 மீட்டர் உயரமான இடங்களில் ஓடவுள்ளதால், Ren Weidong அதிக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அடுத்து, தொலைதூரம் ஓட்ட வீரர் பற்றிய இந்திய செய்தி ஒன்று. இந்தியாவிலுள்ள 76 வயதான Ashis Roy தனது 90 வது தொலைதூர ஓட்டத்தை முடித்து சாதித்துள்ளார். அமெரிக்காவின் Wilmingtonனில் நடைபெற்ற Delaware தொலைதூர ஓட்டம் அவரது 90 வது போட்டியாகும். 600 பேர் கலந்து கொண்ட இந்த ஓட்டத்தில் 26 மைல் தொலைவை அவர் அலெக்ஸாண்டிரியாவில் Potomac ஆறு தொலைதூர ஓட்டத்தில் எடுத்துக்கொண்ட நேரத்தைவிட 9 நிமிடங்கள் அதிகம் எடுத்து ஓடிமுடித்தார். இந்தியாவின் நொய்டாவில் நடைபெற்ற தொலைதூர ஓட்டத்தை ஆறு மணிநேரம் 4 நிமிடங்கள் என்று ஓடி முடித்ததே அவர் இப்போட்டிற்கு முன் இந்தியாவில் கடைசியாக பங்கேற்ற தொலைதூர ஓட்டப்போட்டியாகும். மே 31 ஆம் நாள் பென்சில்வேனியாவில் நடைபெறும் Bob Potts தொலைதூரப் ஓட்டத்தில் கலந்து, ஒரு திங்களில் மூன்று தொலைதூர ஓட்டப்போட்டிகளில் கலந்து கொண்டவர் என்ற பெருமையடைவுள்ளார்.