• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-27 15:45:06    
கடலோர நகரான சிங்தாவ்

cri
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பாய்மர படகோட்ட போட்டி நடைபெற்ற சிங்தாவின் ஈர்ப்பு ஆற்றலை முழு உலகமும் உணர்ந்து கொண்டுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, சீனாவின் புகழ்பெற்ற கடலோர சுற்றுலா நகரமான சிங்தாவில்,

ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளிலான சுற்றுப்பயணம், பாய்மரப் படகோட்டம், தீவுகளில் துணிச்சலாய்வு ஆகியவை, புதிய பொழுதுபோக்கு வழிமுறைகளாக மாறியுள்ளன. வெப்பமான கோடைக்காலத்தில், மக்கள், சிங்தாவ் வந்து கடற்கரையில் தங்கி ஓய்வெடுப்பது நல்ல தேர்வு ஆகும்.
சிங்தாவிலுள்ள ஒலிம்பிக் பாய்மரப் படகு மையம், 2008ம் ஆண்டில் ஒலிம்பிக்கின் பாய்மரப் படகோட்டப் போட்டி நடைபெற்ற பின், உலகளவில் புகழ்பெற்றது.

அதிகாரப்பூர்வமாக பொது மக்களுக்கு திறந்து வைக்கபட்ட பின், இப்பொழுது, இது, சிங்தாவில் வரவேற்கப்பட்ட சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இங்கே வந்து, ஒலிம்பிக் அரங்கைச் சுற்றிப்பார்க்க சிங்தாவ் நகரவாசிகள், வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என அனைவரும், பேரார்வத்தைக் கொள்கின்றனர்.
சிங்தாவின் ஒலிம்பிக் பாய்மரப் படகு மையத்தைப் பார்வையிட்ட பிறகு, பயணிகள், கடலில் படகுச் சவாரி செய்யலாம். தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம். தீவுகளில் துனிச்சல் பயணம் செய்யலாம். தனிச்சிறப்பான கடல் சுற்றுலாவின் பொழுதுபோக்கு ஓய்வு நேரத்தை பலவிதங்களில் அனுபவிக்கலாம்.

சிங்தாவின் சர்வதேசப் பயணக்கப்பல் மன்றம், தீவில் ஒரு நாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. விரைவில், பயணிகள் தாகுங் தீவு, சூசா தீவு ஆகியவற்றுக்குச் சென்று மர்மமான கடல் தீவுப் பயணம் மேற்கொள்ளலாம். இம்மன்றத்தின் பொது மேலாளர் துங்யூங்சிவன் கூறியதாவது:
இப்பொழுது கடல் தீவு சுற்றுலா, இயற்கையை தாமாகவே உணர்ந்து கொள்ளும் பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதற்கான செலவு, நபருக்கு நூறு யுவானைத் தாண்டப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

தவிர, உணர்வுப்பூர்வமான பேருந்து, ஈர்ப்பு ஆற்றல் மிக்கது. ஒலிம்பிக் பாய்மர படகு மையத்திற்கு அருகிலான நீர்ப்பரப்பில், இப்பேருந்துக்கு நிலத்திலும், கடலிலும் ஓடும் திறன் உண்டு.
ஒலிம்பிக் பாய்மர படகோட்டப் போட்டி சிங்தாவில் நடைபெற்றதால், இந்நகரம், உலகளவில் பிரபலமானது. மென்மேலும் அதிகமான பயணிகள் இங்கு வந்து ஒலிம்பிக் அரங்கைப் பார்வையிட்டு, தனிச்சிறப்பியல்பு மிக்க கடல் சுற்றுலாவை மேற்கொண்டு, உள்ளூரின் சுவையான உணவு வகைகளை உண்டு ரசிக்கின்றனர்.