கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை, 2000 மடங்கிற்கு மேலாக அதிகரித்தது. உலகில் 3வது பெரிய வர்த்தக நாடாகவும், 2வது பெரிய ஏற்றுமதி நாடாகவும் சீனா மாறியுள்ளது.
2009ம் ஆண்டின் ஜுன் திங்கள் இறுதி வரை, சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 70 ஆயிரமாகும். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட 220க்கு அதிகமான நாடுகளும் பிரதேசங்களும் சீனாவின் வர்த்தக கூட்டாளிகளாக மாறியுள்ளன. சீனா, 129 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் இரு தரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
பொறுப்பான நாடான சீனா, எதிர்காலத்தில் உலகப்பொருளாதார வளர்ச்சியில் மேலும் பெரிதும் பங்காற்றும்.
|