30 ஆண்டுகள் வெளிநாட்டுத் திறப்புக்கு பின், மேலும் அதிக திறப்பை உலகிற்கு சீனா சைகை காட்டுகின்றது.
கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை சுமார் 2000 மடங்கு அதிகரித்துள்ளது. உலகில் 3வது பெரிய வார்த்தக நாடாகவும், 2வது பெரிய ஏற்றுமதி நாடாகவும் சீனா மாறியுள்ளது.
2008ம் ஆண்டின் இறுதி வரை, உலகின் 190க்கு அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் வர்த்தக உடன்படிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது. இந்த நாடுகளுக்கு 46 இலட்சத்து 20 ஆயிரம் பேரை மணித வள ஆற்றலா சீனா அனுப்பியுள்ளது.
தற்போது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 220க்கு அதிகமான நாடுகளும் பிரதேசங்களும் சீனாவின் வர்த்தக கூட்டாளியாக மாறின. 8 தாராள வர்த்தக உடன்படிக்கைகளில் சீனா கையொப்பமிட்டு, 6 தாராள வர்த்தக மண்டலங்களின் உருவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு, 129 நாடுகளுடனும் பிரதேசங்களுடனும் இரு தரப்பு முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கையிலும் சீனா கையொப்பமிட்டுள்ளது.
|