நவ சீனாவின் வைர விழாவை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் கை எழுத்து மற்றும் ஓவியக் கண்காட்சி, 28ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹுய்லியங்யூ, சீன மத விவகார ஆணையத்தின் மூலம், இக்கண்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு தேசிய இனங்களின் முஸ்லிம்கள், சொந்த தலைசிறந்த கலையைப் பயன்படுத்தி, நாட்டுப்பற்று மற்றும் மதப் பற்று, தேசிய இன ஒற்றுமை ஆகியவற்றின் சிறந்த எழுச்சியை தமது படைப்புகளில் தெரிவித்தனர் என்று சீன முஸ்லிம் சங்கத்தின் தலைவர் சென்குவாங்யுவான் துவக்க விழாவில் தெரிவித்தார்.
3 நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சியில், 25 மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கு மேலான கை எழுத்து மற்றும் ஓவியப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இக்கண்காட்சியில் கலந்து கொண்ட படைப்பாளர்களில், ஹுய், உய்கூர், கசக் முதலிய இனங்களைச் சேர்ந்தோர் இடம்பெறுகின்றனர்.
|