தற்போதைய பொருளாதார நிலைமை பற்றிய பல பிரச்சினைகள் குறித்து 11வது சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி 27ம் நாள் பிற்பகல் பெய்சிங் மக்கள் மாமண்டபத்தில் கருத்தமர்வு நடத்தியது. சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர
கமிட்டியின் தலைவர் அக்கருத்தமர்வுக்கு தலைமை தாங்கினார். தற்போதைய பொருளாதார நிலைமை சிறந்த முறையில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கட்டமைப்புச் சீர்திருத்தத்தையும் வளர்ச்சி வழிமுறை மாற்றத்தையும் விரைவுபடுத்தியதால், எதிர்கால, பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை உருவாகியுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையின் தொடர்ச்சி, உறுதிப்பாடு மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை நிலைநிறுத்தி, முக்கிய துறைகளிலான சீர்திருத்தத்தை தூண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீன அரசவை வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் துணை தலைவர் Liu Shijin இந்த விபரங்களை விவரித்தார்.
|