பெய்ஜிங்கின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு
cri
2008ம் ஆண்டு பெய்ஜிங்கிலான உற்பத்தி மதிப்பு, 1 இலட்சத்து 4 ஆயிரத்து 880 கோடி யுவானை எட்டியது. விலைவாசி மாற்றம் முதலிய காரணங்களை பொருட்படுத்தாமல், இந்த மதிப்பு 1952ம் ஆண்டில் இருந்ததை விட 317 மடங்கு அதிகரித்தது பெய்ஜிங் புள்ளிவிபர ஆணையம் 28ம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன. பெய்ஜிங் நகரவாசி மற்றும் விவசாயிகளின் நபர்வரி ஆண்டு வருமானம், முறையே 24 ஆயிரம் யுவானும் 11 ஆயிரம் யுவானுமாகும். இவையும், 1978ம் ஆண்டில் இருந்ததை விட, முறையே 9.5 மற்றும் 12.2 மடங்கு அதிகரித்ததன. 2008ம் ஆண்டில் பெய்ஜிங்கின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை, 8000 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது, 1978ம் ஆண்டில் இருந்ததை போல் சுமார் 300 மடங்காகும். தவிர, வெளிநாட்டு முதலீட்டாளர் மற்றும் சுற்றுலா பயணியர்களை, பெய்ஜிங் ஈர்க்கும் ஆற்றல் மென்மேலும் வலுப்பட்டு வருகிறது.
|
|