• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-28 09:27:31    
Sun Xi Mei மற்றும் அவரது கிராம நூலகம் 2

cri
Sun Xi Mei, சில புட்டிகளைச் சேகரித்த பிறகு, பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் அவற்றை கொண்டு சென்று விற்றார். இதற்குப் பின் அவர் பணத்தை சிறிது சிறிதாக சேமித்தார். சில சமயங்களில், பழைய பொருட்கள் வாங்கும் அந்த கடையில் மதிப்புள்ள பல புத்தகங்களைக் கண்ட அவர், மலிவான விலையில் அவற்றை வாங்கினார். சில சமயங்களில், அவர் தொலை தூரத்தில் உள்ள பழைய நூல்கள் சந்தைக்குச் சென்று, மலிவான, அரிய நூல்களை வாங்கினார். சிறிது சிறிதாக, Sun Xi Mei தமது செல்வத்தை சேமிப்பது போல, புத்தகங்களைச் சேமித்தார்.

தமது ஊரில் ஒரு நூலகத்தை நிறுவ, Sun Xi Mei கழித்து ஒதுக்கப்பட்ட பொருட்களை எடுத்து விற்று பணம் சேமிப்பது பற்றி அவரது ஆசிரியர்களும் சக மாணவர்களும் கேள்விப்பட்டு மனமுருகினர். தேவைப்படாத புத்தகங்களை Sun Xi Meiக்கு பலர் வழங்கினர். மேனிலைப் பள்ளிப் படிப்பு முடிய இருந்த வேளையில், சக மாணவர்கள் தேவைப்படாத அனைத்து நூல்களையும் Sun Xi Meiக்கு வழங்கினர். மேனிலைப் பள்ளிப் படிப்பு முடிவடைந்த போது, சக மாணவர்களின் உதவியுடன், Sun Xi Mei ஆயிரத்துக்கு அதிகமான நூல்களைச் சேகரித்திருந்தார். அவர் இந்நூல்களை தமது ஊருக்கு கொண்டு சென்றார். கிராமவாசிகள் அவரது வீட்டுக்கு வந்து, இப்புத்தகங்களை இரவல் வாங்கினர். அந்த ஆண்டு, தலைசிறந்த மதிப்பெண்ணுடன், Sun Xi Mei பல்கலைக்கழகத்தில் நுழைந்து பயிலத் துவங்கினார். பல்கலைக்கழகத்தில், ஓய்வு நேரத்தில் அவர் பணிபுரிந்து, பணம் சம்பாதித்து, தமது கனவை நனவாக்க பாடுபட்டார்.

2008ஆம் ஆண்டு கோடைக்கால விடுமுறை நாட்களில், Sun Xi Mei வீடு திரும்பினார். He Bei மாநிலத் தலைநகரின் ஒரு ஊடகத்தில் வெளியான "தங்கள் கனவை நனவாக்க உதவுவது" என்ற நடவடிக்கை பற்றிய கட்டுரையைப் படித்தப் பிறகு, அந்த ஊடக நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, தனது சொந்த ஊருக்கு நூலகம் ஒன்றை நிறுவும் விருப்பத்தை தெரிவித்தார்.
Sun Xi Meiவின் கதை பற்றிய கட்டுரை அவ்வூடகத்தில் வெளியிடப்பட்ட பின், Ling Shou மாவட்டத்தின் பண்பாட்டு மற்றும் விளையாட்டு அலுவலகம், அவருக்கு உதவ, 700க்கு அதிகமான புத்தகங்களையும், நான்கு புத்தக மாடங்களையும் நன்கொடையாக வழங்கியது. பின்னர், He Bei மாநிலம் மற்றும் Shi Jia Zhuang நகரின் செய்தி வெளியீட்டு வாரியங்கள், பல்வேறு சமூகத் துறையினர் ஆகியோர் அவருக்கு அதிகப்படியான புத்தகங்களை நன்கொடையாக வாங்கினர். Sun Xi Meiக்கு சுமார் 5 ஆயிரம் நூல்கள் கிடைத்தன. அனைவரின் கூட்டு முயற்சியுடன், 2008ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், "Qiu Shan கிராம நூலகம்" திறந்து வைக்கப்பட்டது. Sun Xi Meiவின் கடந்த பல ஆண்டுகால விருப்பம் இறுதியில் நனவாகியது.

கழித்து ஒதுக்கிய பொருட்களை சேகரித்து, விற்று, கிராமவாசிகளுக்கென நூலகத்தை நிறுவும் அருஞ்செயல், சமூகத்தால் பாராட்டப்பட்டுள்ளது. He Bei மாநிலத்தின் அனைத்து விவசாயிகளும் புத்தகங்களைப் படிக்கத் துணை புரிய, மேலதிக கிராமங்களில் நூலகத்தை நிறுவ உதவுமாறு பல்வேறு சமூகத் துறையினர்களை வழிகாட்டும் பொருட்டு, He Bei மாநிலத்தில் கிராம நூலகங்களை நிறுவ உதவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு, Sun Xi Mei தூதராக நியமிக்கப்பட்டார். மேலதிக மக்கள், கிராமங்களின் பண்பாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். கிராம நூலகங்களை நிறுவ உதவும் நடவடிக்கையில் சேருமாறு மேலதிக மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
"எனது ஆற்றல் ஒரு வரம்புக்கு உட்பட்டது. மேலதிக உதவி அளிக்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்பது எனது பணியாகும். விவசாயிகளுக்கு இது பேரூக்கம் தரும். அதிகமானோர் தம் மீது அக்கறை செலுத்தி, தங்களது பண்பாட்டு அறிவை அதிகரிக்க உதவுகின்றனர் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்வதற்கு இது துணை புரியும் என்று Sun Xi Mei கூறினார்.