நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், பெய்சிங் மாநகரின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகின்றது. அதன் பன்நோக்க ஆற்றல் சிறப்புடன் வலுவடைந்ததுள்ளது. 2008ம் ஆண்டில், பெய்சிங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, ஒரு இலட்சம் கோடி யுவானை தாண்டியுள்ளது. இது, 60 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட 300 மடங்கிற்கு மேல் அதிகமாகும். பெய்சிங் மாநகரின் புள்ளிவிபரப் பணியகம் 28ம் நாள் வெளியிட்ட தரவுகள் இதைக் காட்டியது.
நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் பெற்றுள்ள ஒளிவீசும் சாதனைகளை கோடிட்டுக்காட்டும் மிக நல்ல எடுத்துக்காட்டு, தலைநகாரான பெய்சிங்காகும்.
புள்ளி விபரங்களின் படி, 2008ம் ஆண்டு, பெய்சிங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, 1 இலட்சத்து 4 ஆயிரத்து 880 கோடி யுவானை எட்டியது. நவ சீனா நிறுவப்பட்ட துவக்கத்தில் இருந்த அதாவது 1952ம் ஆண்டில் இருந்ததை விட 318 மடங்கு அதிகரித்தது.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி சீனாவில் துவங்கிய பின், பெய்சிங்கின் வெளிநாட்டு வர்த்தகத் துறை, விரைவாக வளர்ந்து வருகின்றது. 2008ம் ஆண்டு, பெய்சிங்கின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை, 8ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை தாண்டியது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட துவக்கத்தில் இருந்ததை விட, இது சுமார் 300 மடங்கு அதிகரித்தது. சர்வதேசப் பரிமாற்றம் நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெய்சிங் ஈர்க்கும் ஆற்றலும், வலுவடைந்து வருகின்றது.
Forbes ஏடு அண்மையில் வெளியிட்ட தரவரிசை பட்டியலின் படி, உலகில் பெரிய கொள்வனவு மாநகரங்கள் பற்றிய பட்டியலில், பெய்சிங் 15வது இடம் வகிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில், பெய்சிங்கின் பொருளாதார ஆற்றலும் அதன் வெளிநாட்டுத் திறப்பு அளவும் வலுவடைவது, இதற்கு துணை புரிந்தது என்று பெய்சிங் வணிக கமிட்டியின் செய்தித்திதொடர்பாளர் Xu Kang, எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இவ்வாண்டின் முற்பாதியில், பெய்சிங் மாநகர அரசு ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, சுமார் 30 ஆயிரமாகும். பெய்சிங்கின் சர்வதேச மயமாக்க நிலை, பெரிதும் உயர்ந்தது. இது, வெளிநாட்டு சில்லறை வணிகர்கள் பெய்சிங்கில் முதலீடு செய்வதற்கு சிறந்த சூழ் நிலையை உருவாக்கியது. ஆண்டின் பிற்பாதியில், சில வெளிநாட்டுச் சில்லறை வணிகர்களின் முக்கிய கடைகள், பெய்சிங்கில் நிறுவப்படும் வளர்ச்சி காணப்படும் என்று அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியின் மேம்பாட்டுடன், பெய்சிங் மாநகரவாசிகளின் வாழ்க்கை நிலையும் பெரிய அளவில் சீரடைந்துள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட துவக்கத்தில், பின்தங்கிய பொருளாதாரத்தால், பெய்சிங் மாநகரவாசிகளின் வருமானம் குறைவாக இருந்தது. இவ்வாண்டில் 77வயதாகிய முதியவர் Liu Guixian அம்மையார், அப்போதைய வாழ்க்கை நிலைமை குறித்து குறிப்பிட்ட போது:
அப்போதைய வாழ்க்கை, வறுமையான வாழ்க்கை. எனக்கு பல குழந்தைகள் இருந்தனர். குடும்ப வருமானம் குறைவு. உணவுப் பிரச்சினை குறித்து, அடிக்கடி கவலையடைந்தேன். ஆண்டுதோறும் குளிர்காலத்தில், 7 குடும்பத்தினருக்கு போர்த்திக்கொள்ள, 2 போர்வைகள் மட்டுமே இருந்தன என்றார் அவர்.
1978ம் ஆண்டு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், பொருளாதார கட்டுமானம், நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. பொது மக்களின் உணவு மற்றும் உடைப் பிரச்சினை, படிப்படியாக தீர்க்கப்பட்டது. பிற்காலத்தில், முதியோர் Liu Guixian அம்மையார், சிறிய உணவுக் கடை ஒன்றை நடத்தத் துவங்கினார். இது, அவரின் குடும்பத்துக்கு நிதானமான வருமானத்தை தந்தது. அவர்கள் மென்மேலும் இன்பமாக வாழ்கின்றனர். தற்போது, அவரும் அவரின் கணவரும், பெய்சிங்கில் நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டடத்தில் வாழ்கின்றனர்.
|