• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-29 14:27:46    
வானொலி மற்றும் இணைய சீர்திருத்த திட்டம்

cri
வணக்கம் நண்பர்களே

செப்டம்பர் திங்கள் முதல் நாள் தொடக்கம் தமிழ்ப் பிரிவு சீன வானொலியின் மூன்றாவது தொகுதி சீர்திருத்த பிரிவுகளில் சேரும். அன்று முதல் ஒலிபரப்பு மற்றும் இணைய கட்டுமானத்தில் புதிய திருத்தங்களை நாம் மேற்கொள்வோம். செய்தி, செய்தித்தொகுப்பு இரண்டையும் ஒன்றிணைப்போம். அதாவது முக்கிய செய்தியை அடுத்து அது தொடர்பான விமர்சன வரிகள் இடம் பெறும். ஏற்கனவேயுள்ள செய்தி மற்றும் செய்தித் தொகுப்புக்கான 25 நிமிடஙகள் இனி மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே நிகழ்ச்சியாக 20 நிமிடங்களுக்கு சுருக்கப்படும். அன்றாட சிறப்பு நிகழ்ச்சிப் பகுதியில் நாள்தோறும் 5 நிமிட சீன இசை அல்லது தமிழ் மற்றும் வெளிநாட்டு இசை ஒலிபரப்பபப்படும். நிகழ்ச்சிகள் செப்டம்பர் முதல் நாள் தொடக்கம் புதிய கட்டமைப்பில் சோதனை முறையில் ஒலிபரப்பப்படும்.

அதன் பயன் எப்படி என்பது பற்றி நேயர்களின் விமர்சனங்களையும் கருத்துக்களையும் எங்களுக்காக சேகரித்து தெரிவியுங்கள். மதிப்புக்குரிய ஆலோசனைகளையும் முன்வையுங்கள். குறிப்பாக செய்தி செய்தித் தொகுப்பு இரண்டையும் இணைப்பது பற்றி வெளிநாட்டு வானொலிகளின் கட்டமைப்பு பற்றியும் தெரிவியுங்கள். புதிதாக அதிகரிக்கும் இசைப் பகுதியில் எத்தகைய இசையையும் பாடலையும் நேயர்கள் விரும்புவர்? புதிதாக மாற்றப்படும் இணைய கட்டுமானம் எப்படி? இவை பற்றி நுணுக்கமாக கவனித்து கருத்து கூறுங்கள். தவிரவும் உங்கள் சொந்த எண்ணங்களையும் தெரிவியுங்கள்.

இப்படிக்கு

தி. கலையரசி

தலைவர்

தமிழ்ப் பிரிவு