சீனத் தேசிய இனப் பிரதேசங்களில் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை விரைவாக அதிகரித்து, அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. சீனத் தேசிய இன விவகார ஆணையத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், தேசிய இனப் பிரதேசங்களிலான அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை சீனா வலுப்படுத்தி வருகின்றது. தேசிய இனப் பிரதேசங்களிலான நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை, 1978ம் ஆண்டில் 760கோடி யுவானுக்கு மேலாக இருந்தது. இத்தொகை, 2008ம் ஆண்டில் 1இலட்சத்து 80ஆயிரம் கோடி யுவானுக்கு மேலாக அதிகரித்தது. விமான நிலையம், இருப்புப் பாதை, உயர் வேக நெடுஞ்சாலை, நீர் சேமிப்பு உள்ளிட்ட ஒரு தொகுதி அடிப்படை வசதிகள் கட்டியமைக்கப்பட்டன. தவிர, சீனத் தேசிய இனப் பிரதேசங்களின் நகர மற்றும் கிராமப்புற வருமானம் நிதானமாக அதிகரித்து வருகின்றது.
|