• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-01 10:59:39    
வானியல்யை ஆராய்வதற்கு மிக முன்னேறிய வசதி அளிக்கும் LAMOST எனும் இந்த தொலை நோக்கி

cri

400 ஆண்டுகளுக்கு முன், இத்தாலியர் Galileo தொலை நோக்கியைக் கண்டுபிடித்தார். தொலை நோக்கியின் மூலமான வானியல் ஆய்வு, மனித குலத்தின் பார்வையை விரிவாக்கியுள்ளது. அண்மையில், சீனா 20 கோடிக்கு மேற்பட்ட யுவானைப் பயன்படுத்தி, உலகில் மிகப் பெரிய தொலை நோக்கியை ஆராய்ந்து தயாரித்தது. இன்றைய நிகழ்ச்சியில் வானியல்யை ஆராய்வதற்கு மிக முன்னேறிய வசதி அளிக்கும் LAMOST எனும் இந்த தொலை நோக்கி பற்றி கூறுகின்றோம்.

LAMOST எனும் இந்த தொலை நோக்கி, பரந்த வான் பரப்பு, பல்பொருள் இழை, நிறமாலைக் காட்டி தொலைநோக்கியாகும். பெய்ஜிங் மாநகருக்கு வடகிழக்கில் 170 கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு மலையில் ஒரு பெரிய வெள்ளை நிற கட்டடம் அமைந்துள்ளது. இது தான் LAMOST எனும் தொலை நோக்கி அமைந்த இடமாகும். நெடு தூரத்திலிருந்து பார்க்கும் போது, இது ஒரு ஏவுகணை செலுத்தல் வசதி போன்று, சாய்வான கோணத்தில் காணப்படும். வானியல் தொலை நோக்கி பெரிய கண்ணுடைய அதேவேளையில், அகன்ற பார்வையை கொள்ள முடியாத சிக்கலை LAMOST முறியடித்தது என்று சீன அறிவியல் கழகத்தின் துணைத் தலைவர் Bai chun li கூறினார். அதன் விளைவாக, சீனாவின் வானியல் தொலை நோக்கி ஆய்வு தொழில் நுட்பம் உலகின் முன்னணியில் நுழைந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

LAMOST திட்டப்பணியில் உலகளவில் பல முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சில சர்வதேச வாவியல் துறை வல்லரசுகளால் சமாளிக்கப்படாத அறைகூவல்களாகும். இத்திட்டப்பணி மூலம் சீனாவின் தொலை நோக்கி ஆய்வு தொழில் நுட்பம் உலகின் முன்னணியில் நுழைந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பெரிய கண்ணுடைய மேலும் உயர் தரமான வானியல் தொலை நோக்கிகளை சீனா தயாரிப்பதற்கு இது உறுதியான அடிப்படையை இட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பொதுவாகக் கூறின், பெரிய கண்ணுடைய வானியல் தொலைநோக்கி, அகன்ற பார்வையைக் கொள்ள முடியாது. அதேவேளையில், விரிவான பார்வையுடைய தொலை நோக்கி, பெரிய கண் கொண்டதாய் அமைய முடியாது. காரணம், இந்த தொலை நோக்கி குறைந்தது பல பத்து மீட்டர் நீளமான உயரிய நுண்ணிய உட்குழாயையையும் பெரிய இயந்திரத்தையும் தேவைப்படுகின்றன. மட்டுமல்ல, இந்தப் பெரிய அளவுடைய தொலை நோக்கி விண்ணில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடங்களுக்கேற்ப சுழல வேண்டும். தொழில் நுட்ப ரீதியில் இது மிக கடினமானது.

இருந்த போதிலும், பெரிய கண்கொண்ட பரந்த பார்வையுடைய தொலை நோக்கி பற்றிய ஆராய்ச்சியை பல்வேறு நாடுகளின் வானியல் நிபுணர்கள் கைவிடவில்லை. சீனத் தேசிய நிலை முக்கிய அறிவியல் திட்டப்பணியான LAMOST, 1996ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக துவங்கியது. பல ஆண்டு கால ஆராய்ச்சி மூலம், சீன அறிவியலாளர்கள் இந்த கடினமான பிரச்சினையைத் தீர்த்தனர் என்று LAMOST திட்டப் பணிக்குப் பொறுப்பான தலைமை பொறியியலாளரும், சீன வானியல் ஆய்வு நிலையத்தின் துணை தலைவருமான cui xiang qun அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது

LAMOST இன் குழாய் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. முக்கிய பகுதி அசைய முடியாதது. உள்ளேயிருக்கம் திருத்த பகுதி விண்ணிலுள்ள கோள் அல்லது நட்சத்திரத்தின் இடத்திற்கேப சழலும் என்று அவர் கூறினார்.

LAMOST எனும் தொலை நோக்கி, 25 சதுர மீட்டருடைய ஒரு திருத்த பகுதி, 40 சதுர மீட்டருடைய முக்கிய கண்ணாடி மற்றும் படிமப்பரப்பால் உருவாக்கப்பட்டது. முக்கிய கண்ணாடியும் படிமப் பரப்பும் தரை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளன. திருத்த பகுதி கோள்களின் இடமாற்றத்துக்கிணங்க சுழல் செய்கின்றது. கோள்களின் ஒளி திருத்த பகுதி மூலம் முக்கிய கண்ணாடியில் பிரதிபலிக்கின்றது. பிறகு முக்கிய கண்ணாடி மூலம் பிரதிபலிக்கப்பட்டு படிமப்பரப்பில் படம் உருவாகின்றது. பரிசோதனை முடிவின் படி, LAMOST தொலை நோக்கியின் விட்டம் 6 மீட்டருக்கு மேலாகும். பார்வை ஆற்றல் 5 டிகிரியாகும். வேறு நாடுகளில் அதே விட்டமுடைய வானியல் தொலை நோக்கியின் பார்வை ஆற்றல் ஒரு டிகிரிக்குள் உள்ளது.

தவிர, LAMOST எனும் தொலை நோக்கி, உலகில் மிக அதிக ஒளிப்பரிகை நிறமாலைப் பெறக் கூடிய தொலை நோக்கியாகும். இது அதன் மற்றொரு தனிச்சிறப்பாகும். LAMOST திட்டப்பணிக்கு பொறுப்பான தலைமை பொறியியலாளர் cui xiang qun கூறியதாவது

LAMOST தொலை நோக்கி, 4000 ஒளியியல் இழைகளைக் கொண்டுள்ளது. ஆகையால், பெரும் அளவிலான வானிலை கண்காணிப்பை மேற்கொள்ளலாம். உலகிலுள்ள சில நூறு ஒளியியல் இழைகளால் சில நூறு கோள்களின் ஒளிப்பிரிகை நிறமாலைகளைக் கண்காணிக்கும் அடிப்படையில், தொலை நோக்கியின் ஒளியியல் இழைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்து, சில ஆயிரம் கோள்களின் ஒளிப்பிரிகை நிறமாலைகளைக் கண்காணிக்கின்றோம் என்று அவர் கூறினார்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட ஆயிரம் கோடிக்கணக்கான பல்வகை கோள்களில், பத்தாயிரத்தில் ஒரு பகுதியின் மீது ஒளிப்பிரிகை நிறமாலை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆகையால், LAMOST தொலை நோக்கி குறுகிய சில ஆண்டு காலத்தில் முன்பு பல நூறு ஆண்டு முயற்சி மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கண்காணிப்பு கடமையை நிறைவேற்றியது.

LAMOST தொலை நோக்கியின் குறுகிய கால திட்டம் பற்றி, LAMOST திட்டப் பணியின் முதன்மை அறிவியலாளரும் சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான zhu yao quan எடுத்து கூறினார். அவர் கூறியதாவது

சில பத்து இலட்சம் நட்சத்திர மண்டலங்கள், சில பத்து இலட்சம் quasarகள், சில பத்து இலட்சம் விண்மீன்கள் ஆகியவற்றை கண்காணித்து ஆய்வு மேற்கொள்வது LAMOST திட்டப்பணியின் ஐந்தாண்டு திட்டமாகும். இலட்சக்கணக்கான மாதிரிகளை ஆய்வு மேற்கொள்வது, உலகில் மிக பரந்த விண்வெளி பகுதி பரிசோதனையாக திகழ்கின்றது. இந்த ஆய்வுக்குப் பின், விண்வெளியில், நட்சத்திர மண்டலங்களின் பரவல் பற்றி மேலும் நன்றாக அறிந்து கொள்ளலாம். விண்வெளியின் நேற்று, இன்று, நாளை ஆகியவை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

LAMOST தொலை நோக்கி சீனாவின் வானியல் ஆய்வு துறைக்கு திறக்கப்பட்டது. மேலும் சர்வதேச ஒத்துழைப்பில் இது ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கும். தற்போது, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இத்திட்டப்பணியின் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டுள்ளனர் என்று பேராசிரியர் zhu yao quan கூறினார்.