• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-01 10:49:15    
கோழி இறைச்சி இடம்பெறும் ஒரு உணவு வகை

cri

வாணி -- வணக்கம், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
க்ளீட்டஸ் -- வணக்கம், எங்களுடன் சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.வாருங்கள்.
வாணி -- க்ளீட்டஸ், முன்பு வழங்கிய நிகழ்ச்சியில் சி ச்சுவான் மாநில உணவு வகைகள் பற்றி எடுத்து கூறினோம். இது பற்றி கருத்து தெரிவிக்கலாமா?
க்ளீட்டஸ் – கண்டிப்பாக. சி ச்சுவான் மாநில உணவு வகைகள் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. அதாவது, கார்ம் அல்லது காரச் சுவை உடையது.
வாணி – பெய்ஜிங்கில் பல சி ச்சுவான் உணவகங்கள் உண்டு. நீங்கள் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று சி ச்சுவான் உணவு வகைகளை ருசி பார்த்தீர்களா?
க்ளீட்டஸ் – என் இல்லத்துக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்துக்கு அடிக்கடி சென்றுள்ளேன். உணவு வகைகளில் ma po tou fu என்பது நினைவில் ஆழ பதிவாகியது.
வாணி – ஓ. நீங்கள் குறிப்பிட்ட ma po tou fu, சி ச்சுவான் உணவு வகைகளில் பிரதிநிதித்துவம் வாய்ந்தது.
க்ளீட்டஸ் – இன்றைய நிகழ்ச்சியில் எந்த உணவு வகை பற்றி கூறுவோம்?
வாணி – கடந்த வாரம், சி ச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றேன். அவர் தயாரித்த மிளகாய், கோழி இறைச்சி வறுவல் மிகவும் சுவையானது. அவரிடமிருந்து அதன் தயாரிப்பு முறையைக் கற்றுக்கொண்டேன். அது பற்றி பார்ப்போமா?
க்ளீட்டஸ் – நல்லது. கோழி இறைச்சி எனக்கும் பிடிக்கும்.
வாணி – சரி, முதலில் தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன்.


கோழி இறைச்சி 750 கிராம்
இஞ்சி, சிறிதளவு
சோயா சாஸ் 2 தேக்கரண்டி
உப்பு அரை தேக்கரண்டி
சமையல் மது 2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் 4 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் 10 கிராம்
மிளகு சிறிதளவு
வாணி – முதலில், கோழி இறைச்சியை சுத்தம் செய்ய வேண்டும். வசதி இருந்தால், கோழி கால் அல்லது கோழி சிறகுகளைப் பயன்படுத்தலாம். இவற்றால் தயாரிக்கப்பட்ட வறுவல் மேலும் சுவையானது.

க்ளீட்டஸ் – வாணி, சீன உணவு வகைகளில் கோழி தோல் பொதுவாக நீக்கப்படாது என்று கண்டுள்ளேன்.
வாணி – ஆமாம், நேயர்கள் தங்களின் வழக்கப்படி கோழி உணவு வகைகளை தயாரிக்கலாம். அல்லது, முற்றிலும் சீனர்களின் வழக்கப்படி தயாரித்து ருசிப்பார்க்கலாம்.
க்ளீட்டஸ் – கோழி இறைச்சியில் பெரிய எலும்புகளை நீக்க வேண்டும். பிறகு, 2 சென்டி மீட்டர் அளவாக வெட்டிக்கொள்ளுங்கள்.

வாணி – கோழி இறைச்சி துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டவும். இதில், நறுக்கப்பட்ட இஞ்சி, சோயா சாஸ், உப்பு, சமையல் மது ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாக கிளற வேண்டும்.
க்ளீட்டஸ் – உடனடியாக தயாரிக்க துவக்கலாமா?
வாணி – இல்லை. மசாலாகளுடன் கலக்கப்பட்ட கோழி இறைச்சி துண்டுகளை சுமார் அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
இப்படி செய்தால், மசாலா சுவை நன்றாக கோழி இறைச்சிக்குள் சேர்க்கலாம்.
க்ளீட்டஸ் – காத்திருக்கும் நேரத்தில், காய்ந்த சிவப்பு மிளகாய்களை 2 சென்டி மீட்டர் அளவாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

வாணி -- 30 நிமிடங்களுக்குப் பின், வாணலியை அடுப்பின் மீது வைத்து அதில் சமையல் எண்ணெயை ஊற்றவும். 5 வினாடிகளுக்குப் பின், நறுக்கப்பட்ட காய்ந்த சிவப்பு மிளகாய்களையும் மிளகுகளையும் வாணலியில் கொட்டி, நன்றாக வதக்கவும்.
க்ளீட்டஸ் – கொட்டிய சீக்கிரத்தில், மிளகாயின் மணம் வரும். மிளகாய் தீய்ந்து போகாமல் தவிர்க்கும் வகையில், வாணலியிலுள்ள மிளகாயின் நிறம் அடர் சிப்பமாக மாறியதுடன் அவற்றை வாணலியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

வாணி – நெருப்பை அணைக்கக் கூடாது. கோழி இறைச்சி துண்டுகளை வாணலியில் கொட்டி, நன்றாக வதக்கவும். சுமார் 2 நிமிடங்களுக்குப் பின், கோழி இறைச்சி துண்டுகளின் நிறம் வெள்ளையாக மாறிவிடும். அப்போது, வதக்கப்பட்ட சிவப்பு மிளகாய்களை மீண்டும் வாணலியில் கொட்டி, கோழி இறைச்சியுடன் சேர்த்து வதக்கவும்.


க்ளீட்டஸ் – மிதமான சூட்டில் தொடர்ந்து வதக்கவும். கோழி இறைச்சியின் நிறம் பொன் நிறமாக மாறிய பின், வாணலியில் சிறிதளவு சர்க்கரையை கொட்டலாம்.
வாணி – சுவையான மிளகாய் கோழி இறைச்சி தயார்.
க்ளீட்டஸ் – கோழி இறைச்சி சாப்பிட விரும்பும் நேயர்கள் வீட்டில் இந்த உணவு வகையைத் தயாரித்து ருசிப்பாருங்கள்.