2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி ஸ்விட்சர்லாந்தில் புரப்புரை செய்யும் பணியும் நுழைவுச்சீட்டு விவகாரத்தின் துவக்க விழாவும் 31ம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் விவகார ஒருங்கிணைப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் சென் சியெஜின், இதன் ஆயத்தப் பணியின் புதிய நிலைமை பற்றி விவரித்தார்.
தற்போது, இந்தப் பொருட்காட்சியில் பங்கேற்பது தொடர்பான ஆயத்த பணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 31ம் நாள் வரை, மொத்தம் 241 நாடுகள், பிரதேசங்கள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவை இதில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் மிக அதிகமான பதிவாகும் என்று சென் ஜின் கூறினார்.
|