• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-02 17:03:57    
இருகரை மரிமாற்றத்தில் கவனம் செலுத்திய Jiao Renhe

cri
தைவான் நீரிணை இருகரை உறவின் வரலாற்றை அறிந்து கொண்ட நண்பர்களுக்கு Jiao Renhe என்ற பெயர் நன்கு அறிமுகமானது. தைவான் நீரிணை தொடர்பு நிதியத்தின் துணை இயக்குநரும் தலைமை செயலாளருமான Jiao Renhe, பல முறை சீனப் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொண்டு, இருகரை உறவின் வளர்ச்சி பற்றியும் இருகரை பரிமாற்றம் பற்றியும் தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தியுள்ளார். தற்போது அவர் அரசியல் துறையிலிருந்து விலகி, வழக்கறிஞராக வேலை செய்கிறார். ஆனால் இருகரை பரிமாற்றம் என்ற இலட்சியத்திலிருந்து அவர் விலகவில்லை.

"இருகரைகளின் ஒன்றிணைப்பும் சீனாவின் வலிமையும் நான் இன்னும் வாழ போகும் நாட்களில் காணப்படும் என நம்புகின்றேன்" என்று எமது செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில் 61 வயதான Jiao Renhe வலியுறுத்திக் கூறினார்.

Zhe Jiang மாநிலத்தில் பிறந்த அவர் 2 வயதில் குடும்பத்தினருடன் தைவானுக்கு குடிபெயர்ந்தார். தைவானின் சீனப் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற பின், அமெரிக்காவுக்குச் சென்று கல்வி பயன்று, சட்டவியல் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு, சீனப் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர், தைவான் அதிகார வட்டாரத்தின் பல வாரியங்களில் அவர் முக்கிய பதவியேற்றார். 1993ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை தைவான் நீரிணை தொடர்பு நிதியத்தின் துணை இயக்குநரும் தலைமை செயலாளருமான அவர், இருகரை உறவின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார்.

1994ஆம் ஆண்டு Jiao Renhe தைவான் நீரிணை தொடர்பு நிதியத்தின் உறுப்பினருக்கு தலைமை தாங்கி முதல்முறையாக சீனப் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொண்டார். அவர் குடும்பத்தினருடன் தைவானுக்கு குடிபெயர்ந்த பின் சீனப் பெருநிலப்பகுதிக்குத் திரும்புவது அதுவே முதல்முறை. பின்னர் தைவானுக்கும் சீனப் பெருநிலப்பகுதிக்கும் இடையில் அவர் பல முறை போய் வந்து, தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத்துடன் பல்வேறு நிலையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

1994ஆம் ஆண்டின் இறுதியில் Jiao Renhe மற்றும் தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத்தின் பணியாளர்களின் முயற்சியோடு, இரண்டு அமைப்புகளின் பேச்சுவார்த்தை சில பிரச்சினைகளில் முன்னேற்றம் அடைந்தது. ஆனால் தைவான் அதிகார வட்டாரம் முன்வைத்த இரண்டு நாடுகள் என்ற கூற்று, இயல்பான நிலைக்கு வந்து கொண்டிருந்த இருகரை உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. 1998ஆம் ஆண்டு Jiao Renhe மன வருத்தத்துடன் தைவான் நீரிணை தொடர்பு நிதியத்திலிருந்து விலகினார். 2 ஆண்டுகளுக்குப் பின், Chen Shuibian அதிகார வட்டாரத்தின் தைவான் சுதந்திரம் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாததால் அரசியல் துறையிலிருந்து அவர் விலகினார். மீண்டும் வழக்கறிஞராக பணிபுரிந்த அவர், தைவான் Xin He சர்வதேச சட்ட விவகார பணியகத்தின் தலைவர் பதவியேற்றார். கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அவர் இருகரை சட்டவியல் துறையினருடன் தொடர்பு கொண்டு பல்வகை கருத்தரங்குகளை நடத்தி, இருகரை பரிமாற்றத்தையும் பயணத்தையும் முன்னேற்றி வருகிறார்.