• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-02 10:03:25    
பெய்ஜிங் மாநகரவாசிகளின் தொலைத்தொடர்பு வழிமுறையின் மாற்றம்

cri

செல்லிடபேசி பரவலாக்கப்படாததற்கு முன், நிலையான தொலைபேசி வசதி, 1990ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் விரைவாக அதிகரித்தது. அப்போது, நிலையான தொலைபேசிகள் இலவசமாகப் பொருத்தப்பட்டன. ஏறக்குறைய அனைத்து குடும்பங்களிலும் தொலைபேசிகள் இருந்தன என்று லூசுயீங் கூறினார்.
அதே வேளையில், சீனாவில் செல்லிடபேசியின் நுகர்வுக் கட்டணம், இடைவிடாமல் குறைந்து கொண்டிருந்தது. செல்லிடபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும், விரைவாக அதிகரித்தது. 2001ம் ஆண்டு, லூசுயீங்கின் மகள் லியொஜிங்ஜின்,

பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவரது பெற்றோர், அவருக்கு ஒரு செல்லிடபேசியை விருதாக வழங்கினர். செல்லிடபேசியைப் பயன்படுத்துவதோடு, லியொஜிங்ஜின்னுடனான சம வயது குழந்தைகள், கடந்த நூற்றாண்டின் இறுதி காலம் முதல், கணினி மற்றும் இணையத்தையும் தொடர்புக்கு பயன்படுத்தத் துவங்கினர். அப்போது, பள்ளியிலுள்ள நண்பர்களுடன் இணைய தளத்தின் மூலம், தொடர்பு கொள்ளத் துவங்கினோம். பலர் இணையத்தின் மூலம், புதிய நண்பர்களை அறிந்து கொண்டுள்ளனர் என்று லியொஜிங்ஜின் கூறினார்.
அப்போது, மின்னஞ்சல்களைப் பெற மிகவும் விரும்பினேன். இணைய தளத்திலுள்ள எனது குறிப்புகளுக்கு, பிறர் வழங்கும் பதில்களைப் பார்க்க விரும்பினேன் என்று அவர் கூறினார்.

இப்போது, இணையமும் செல்லிடபேசியும், சீன மக்களின் வாழக்கையில் இன்றியமையாத பகுதிகளாக மாறியுள்ளன. 2009ம் ஆண்டின் முற்பாதியில், சீனாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, 30 கோடியைத் தாண்டியுள்ளது. இது உலகில் முதலிடம் வகிக்கிறது என்று 2009ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் வெளியிடப்பட்ட 24வது சீன இணைய வளர்ச்சியின் நிலைமை பற்றிய அறிக்கை காட்டியது. இணையம் விரைவாக வளரும் போது, சீனாவில் செல்லிடபேசி பரவலாக்கப்பட்ட விகிதம், 52.2 விழுக்காட்டை எட்டியுள்ளது. சீனாவில் இருவரில், ஒருவருக்கு செல்லிடபேசி உண்டு.
தங்களது மகளின் தூண்டுதலும், செல்வாக்கும் உதவ, லூசுயீங்கும், லியொசிசாங்கும், சில ஆண்டுகளுக்கு முன், இணையத்தைப் பயன்படுத்தத் துவங்கினர். ஓய்வு நேரத்தில், லூசுயீங் இணையத்தில் செய்திகளை வாசித்து, தனது நண்பர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி, நிழற்படங்களைப் பரிமாற விரும்புகின்றார். மகளிடமிருந்து லியொசிசாங் இணையத்தின் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, பொருட்களை வாங்கவும் கற்றுக்கொண்டுள்ளார்.

இணையத்தைப் பயன்படுத்தி, மக்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, செய்திகளைப் பெற முடியும். அவற்றைத் தவிர, இணையத்தில், மின்னணு வணிக அலுவல், மின்னணு நிர்வாகம் முதலியவையும் மேற்கொள்ளப்பட முடியும். தற்போது, விவசாயிகள், வேளாண் சேவை இணைய தளங்களைப் பார்த்து, புதிய வேளாண்துறைத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இணையத்தின் மூலம், வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனையும் செய்ய முடியும். தவிர, காவற்துறை நெடுந்தூரக் கல்வி, மருத்துவச் சிகிச்சை பெறும் முன்பதிவு முதலியவற்றில், இணையம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3G செய்தித் தொடர்பின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் செல்லிடபேசி மூலம், இசையை நகல் எடுத்துக்கொள்வது, ஆவணங்களைக் கொண்டுச் செல்வது உள்ளிட்ட இணையத்தின் செயற்திறன்கள், நனவாக்கப்பட முடியும். விரைவில் தான் செல்லிட பேசி மூலம், வெகு தூரத்திலுள்ள நண்பர்களுடன் பார்த்தபடி பேசக் கூடும் என்று லூசுயீங் கூறினார்.
1 2