சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, நேபாளத்தின் வணிக அமைச்சகத்துடன், 2ம் நாள், புரிந்துணர்வு குறிப்பாணை ஒன்றில் கையொப்பமிட்டது. ஒன்று மற்றதற்கு சலுகை மற்றும் உதவி அளிக்கும் கோட்பாட்டின்படி, இரு தரப்பின் வர்த்தகத்தை முன்னேற்றும். வர்த்தகத்தை வளர்க்கும் நோக்கில், சீன திபெத்-நேபாள பொருளாதார வர்த்தக ஒருங்கிணைப்புக் குழுவைக் உருவாக்க, இரு தரப்பும் தீர்மானித்தன.
இந்த ஒருங்கிணைப்புக் குழு, இரு தரப்பின் தொடர்புடைய அரசுகளின் உயர் நிலை அதிகாரிகளாலும், எல்லைப் பிரதேச நிர்வாக வாரியங்களையும் உள்ளடக்கும். இந்த புரிந்துணர்வு குறிப்பாணை கையொப்பமிட்ட, 6 திங்கள் காலத்திற்குள், முதல் சந்திப்பு நடைபெறும். அதற்குப் பின், இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் சந்திப்பு, ஆண்டுதோறும், மாறி மாறி லாசாவிலும் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவிலும் நடைபெறும் என்று இரு தரப்பும் கூறின.
|