• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-03 16:19:49    
சுவையான சீன உணவு வகைகள்

cri
கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவது தவிர, சீனாவின் பல்வகை தனிச்சிறப்பியல்பு மிக்க சுவையான உணவு வகைகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது உட்கொள்ளப்படலாம். உலகப் பொருட்காட்சிக்குள்ளே சீனாவின் சுவையான உணவுப் பொருட்களை உட்கொண்டு ரசிக்கலாம் என்று பரப்புரை செய்யப்படுகின்றது. ஆகவே உட்கொள்வதன் மூலம் நண்பர்களுடன் பழகி வர்த்தகத்தை முன்னேற்றுவது இந்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் இன்னொரு அம்சமாகும். இந்த பொருட்காட்சியில் சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய இடம் உணவுச் சேவைக்கென ஒதுக்கப்படும். பொருட்காட்சியின் தங்க பகுதியாக கருத்தப்படும் ஐயாயிரம் சதுர மீட்டர் உணவு வீதியின் பெயர் "சீனா" என்பதாகும். இந்த வீதியில் சீனாவின் பாரம்பரிய எட்டு கோவை உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இருக்கின்ற வண்ணம் சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள புகழ் பெற்ற சிற்றுண்டிகள் மற்றும் உணவு வகைகளை சுவைக்கலாம். பயணிகளை சீன உணவு வகைகளை சுவையாக உட்கொண்டு ரசிக்கச் செய்வது என்பது ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை செவ்வனே செய்வதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இப்பொருட்காட்சியை சேர்ந்த உள்நாட்டு அரங்கு விவகாரங்களுக்கு பொறுப்பான துணைத் தலைவர் சியேன்போச்சிங் விவரித்தார்.

இந்த 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான உணவு சாலையை

நிர்வகிப்பது, மேசை நாற்காலி தட்டுகள் உள்ளிட்ட உணவு போடுவதென்ற கருவிகள், குப்பை கையாள்வது போன்ற சேவைகள் மக்கள் கவனம் செலுத்தும் அம்சங்களில் ஒன்றாகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையம் இது பற்றி மக்களின் கவலையை நீக்கும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. உணவகம் நடத்தும் இடம் வாடகையின்றி பயன்படுத்தப்படும். மேசை, நாற்காலி, உணவு போடும் கருவிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமான முறையில் சுத்தம் செய்யப்படும். குப்பைகள் குவிந்து கையாளப்படும். உணவு சாலையில் நுழைவதற்கு உணவகம் நடத்துவோர் உத்தரவாத தொகையாக தலா 50 ஆயிரம் யுவான் மட்டும் கட்டுவர். திங்களுக்கு வரி கட்டிய பின் வருமானத்திலிருந்து 8 விழுக்காட்டுத் தொகை தொடர்புடைய நிர்வாக கட்டணமாக பயன்படுத்தப்படும். ஷான்துங், சிச்சுவான், சியான்சு, ச்செச்சியாங், குவான்துங், புஃசியென், ஹுனான், ஆன்குவே ஆகிய எட்டு பெரிய உணவு வகைகளை தனித்தனியாக நடத்தும் உணவகத்தின் நிலபரப்பு சுமார் 350 சதுர மீட்டராகும். இந்த உணவு வீதியில் விற்கப்படும் உணவு வகைகள் முக்கியமாக சிற்றுண்டி மற்றும் விரைவு உணவுப் பொருட்களாகும். இந்த எட்டு புகழ் பெற்ற உணவு வகைகளை அவற்றுக்கு ஏற்ற உணவகங்களில் மக்கள் தேர்வு செய்து மெதுவாக உட்கொண்டு ரசிக்கலாம். புகழ் பெற்ற எட்டு சீன உணவு வகைகள் தவிர, கீழ் மற்றும் மேலை நாட்டு விரைவு உணவகங்கள், தனிச்சிறப்பு நிறைந்த உணவகங்கள், சைவ உணவகங்கள் ஆகியவை இடம் பெறும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது நாள்தோறும் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும் திறன் 3 இலட்சத்துக்கு மேலான செட்களை எட்டும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையகத்தை சேர்ந்த வணிக நிர்வாக சேவை துறையின் துணைத் தலைவர் லீங்சுன்யூன் இவ்வாறு விவரித்தார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாள்தோறும் சுற்றுலா பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 4 லட்சமாக இருக்கும். அவர்களில் 70 விழுக்காட்டினர் பொருட்காட்சி வளாகத்தில் உணவு உட்கொள்வர். ஆகவே இந்த உலகப் பொருட்காட்சியை வாய்ப்பாக பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு விலை மலிவான பல்வகையான சீன உணவுகளை வழங்கி சீன தேசத்தின் உணவு பண்பாட்டை பரப்புரை செய்வோம் என்றார் அவர். மிக பல பயணிகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயணம் செய்யும் அதேவேளையில் சீன உணவு வகைகளை உட்கொண்டு ரசித்து வசதியான அன்பான சேவையை அனுபவிப்பர். இதன் மூலம் சீனா மீதான புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்வது என்பது எங்கள் நோக்கங்களில் ஒன்றாகும் என்று சேவை துறையின் துணைத் தலைவர் லீங்சன்யூன் செய்தியாளர்களுக்கு விவரித்தார்.