• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-03 15:00:36    
வீர விருது

cri
ஆஸ்திரேலியாவில் வீரச்செயல் புரிந்தோருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இதில் என்ன வியப்பு இருக்க போகிறது. வீரச்செயல் புரிந்த சிலருக்கு விருதுகள் வழங்கி மதிப்பளிப்பது வாடிக்கை தானே என்று கேட்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் ஒரு குதிரைக்கு வீர விருது வழங்கப்படயிருக்கிறது. சில திங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயால் 173 பேர் உயிரிழந்தனர். அதுவே அந்நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் அதிக உயிரிழப்பையும், அழிவுகளையும் கொண்டுவந்த பயங்கர காட்டுத்தீ. Paddy என்ற குதிரையின் வீரச்செயல் மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது. பெப்ரவரி 7 ஆம் நாள் விக்டோரியாவில் காட்டுத்தீ பரவிவந்தது. அதிலிருந்து தப்பிக்க ஓடிவந்த நான்கு செம்மறியாடுகளுக்கும், இரண்டு வெள்ளாடுகளுக்கும் பாதுகாப்பு வளையம் போல் மறைத்து நின்றுக்கொண்டு இக்குதிரை அடைக்கலம் அளித்துள்ளது. அதன்மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டிய பிறகும் அந்த செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பாதுகாத்து அரணாக நிற்பதிலிருந்து அது அசையவேயில்லை என்று அதனை பராமரித்து வரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மைக் சால்மன் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். இந்த குதிரை முன்பு காவல்துறையினரின் அணிவகுப்பில் சேவைபுரிந்து பின்னர் ஓய்வுபெற்றது. விலங்கு வதை தடுப்பு ராயல் சங்கம் இந்த குதிரைக்கு வீரச்செயல் விருது வழங்க பரிந்துரைத்துள்ளது.