சிங்தாவ் நகரில் சுற்றுலா பயணம்
cri
சிங்தாவ் நகரில் பயணம் மேற்கொண்டால், பியர் மற்றும் கடல் வளப் பொருட்களைச் சுவைப்பார்க்க வேண்டும். இரவு நேரத்தில், சிங்தாவ் நகரின் தூசோ வீதியிலுள்ள பியர் சாலை படிப்படியாக கலகலப்பாகிறது. நூறு ஆண்டுகால வரலாறுடைய பியர் பண்பாடு, அடர்ந்த உள்ளூர் பாணி, பியர் ஆலைகளிலிருந்து நேரடியாக கிடைத்த தூய பியர் ஆகியவை, உள்ளூர்
நகரவாசிகளையும் ஏராளமான பயணிகளையும் ஈர்க்கின்றன. நகரவாசி திரு சாங், நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி இங்கு வருகிறார். அவர் கூறியதாவது: வசதியான போக்குவரத்து, சுவையான பியர் மற்றும் உணவு வகைகள், குறைவான விலை, நல்ல சூழ்நிலை முதலிய காரணங்களால், நாங்கள் அடிக்கடி இங்கு வருகின்றோம் என்று அவர் கூறினார். பியர் விற்பனை சாலை மேலாண்மை மையத்தின் தலைவர் செங் சியன் செய்தியாளரிடம் பேசுகையில்:
சிங்தாவ் நகரவாசிகள், பியர் மீது சிறப்பான உணர்வைக் கொண்டுள்ளனர். உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை, பியர் விற்பனை சாலை, வீடு போன்றது. வெளியூர் பயணிகளைப் பொறுத்தவரை, இது, வரலாறும் நவீனமயமாக்கமும் இணையும் இடமாகும் என்று குறிப்பிட்டார். பியர் குடித்து, கடல் வள பொருட்களைச் சுவைத்த பிறகு, சிங்தாவின் வான் திரையைப் பார்த்து ரசியுங்கள். இது, பழைய ஆலையைப் பயன்படுத்தி திருத்தி கட்டியமைத்த புதிய காட்சி தலமாகும். ஒலிம்பிக்கிற்குப் பின், சிங்தாவின் சுற்றுலாவில் புதிய தெம்பு ஏறியுள்ளது.
பொழுதுப்போக்கு, சுற்றுலா ஆகியவற்றை அனுப்பவிப்பதோடு, மக்கள் அனைவரும் விளையாட்டு, உடல் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இந்தச் சுற்றுலா நகரத்தில் ஓய்வு மற்றும் விடுமுறை சூழ்நிலை மென்மேலும் நன்றாக இருக்கிறது. அண்மையில், சீனாவின் 11வது தேசிய விளையாட்டு பனி விளையாட்டுப் போட்டி நடைபெற்ற சிங்தாவின் விளையாட்டு மையத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த அரங்கு, பொது மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டு, சேவை புரிந்தது. ஒரு நாள் காலை மட்டும், சுமார் 500 நகரவாசிகள் இங்கு வந்து விளையாடினர். திரு லீ கூறியதாவது:
சிங்தாவில் இவ்வரங்கத்தின் வசதி நன்றாக இருக்கிறது. குழந்தைகளுடன் இணைந்து இங்கு வந்து விளையாடி உடல் பயிற்சி செய்வது, மகிழ்ச்சி தரமானது என்று அவர் தெரிவித்தார். இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில், 11வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குறுகிய பனிச்சறுக்கு மற்றும் பனிச்சறுக்கு நடனப் போட்டிகள் சிங்தாவில் வெற்றிகரமாக நடைபெற்றன. இதனால் மென்மேலும் அதிகமான நகரவாசிகள், பனி விளையாட்டுக்களின் மேல் ஆர்வம் கொள்ள துவங்கினர்.
|
|