"நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்புச் சட்டம்"நடைமுறைக்கு வந்துள்ள சுமார் 20 ஆண்டுகளில் இது தொடர்பான சீனக் கொள்கை நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன. கடுமையான நீர் மற்றும் மண் அரிப்பு பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு துறைத் தலைவர் லியூ ச்சுங் 2ம் நாளிரவு சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள குவெய்சோ நகரில் செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.
கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் யாங்சி ஆற்றின் நடு மற்றும் மேற்பகுதிகளிலும் மஞ்சள் ஆற்றின் நடு மற்றும் மேற்பகுதிகளிலும் நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு உள்ளிட்ட கட்டுப்பாட்டுத் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு இதற்கு மொத்தம் 1280 கோடி யுவானை ஒதுக்கியது. இதனால் பியனடைந்த நிலப்பரப்பு சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் சதுரக் கிலோமீட்டராகும் என்று அவர் குறிப்பிட்டார்.
|