2009ம் ஆண்டில், பெய்சிங் மாநகரின் நபர்வாரி உற்பத்தி மதிப்பு 10 ஆயிரம் அமெரிக்க டாலரை எட்டும். மக்களின் வாழ்க்கை நிலை ஓரளவு சொகுசான நிலையை எட்டும் என்று பெய்சிங் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் Zhao Lei 3ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
நகரின் அடிப்படை நவீனமயமாக்கத்தை பெய்சிங் 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நனவாக்கியுள்ளது. 2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008ம் ஆண்டில் பெய்சிங்கின் மொத்த பொருளாதார மதிப்பு ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட பின், பெய்சிங் மாநகர வாசிகளின் வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது என்று Zhao Lei கூறினார்.
|