அழகு பற்றிய Zhang Yushanனின் LOHAS கருத்து
cri
LOHAS என்றால், நலமான, தொடர்ச்சியான வாழ்க்கை முறை என்று பொருள். 25 வயதில் Zhang Yushan பொழுது போக்கு வட்டத்திலிருந்து விலகி அழகு பண்பாட்டுத் துறையில் ஈடுபட்ட வியாபாரியாக மாறினார். 3 ஆண்டுகளுக்குள் அவரது நிறுவனம் சந்தைப்பட்டு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அவரது வெற்றி பெற்ற அனுபவங்கள் சிறப்பானதல்ல. அவர் ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையான மனப்பாங்குடன் தனது இலட்சியம் மற்றும் வாழ்க்கையை எதிர் கொள்கிறார். அவரது பார்வையில், LOHAS என்பது, வாழ்க்கை மீதான மனநிலை மட்டுமல்ல, பணி மதிநுட்பமும் ஆகும்.
Zhang Yushanனின் முகம் 10 ஆண்டுகளுக்கு முன் திரைப்படத்தில் காணப்பட்டதைப் போல் இன்னும் இளமையாக இருக்கிறது. அழகு பண்பாட்டுத் துறையில் ஈடுபட்ட அவர் உயிருள்ள விளம்பரப் பலகை போல் இருக்கிறார். 20 வயதளவில் அவர் உள்ளார்ந்த ஆற்றல் மிக்க நடிகையாக கருதப்பட்டார். ஆனால் தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றில் பங்கெடுத்த பின், அவர் எடை குறைப்பு நிறுவனத்தை நடத்தி, Xiu Shen Tang எனப்படும் அவரது நிறுவனத்தை வெற்றிகரமாக சந்தைப்படச் செய்தார். Zhang Yushanனின் முதலாவது LOHAS மனநிலை: மகிழ்ச்சி மற்றும் நளினத்தை பணிச் சூழல் மற்றும் நிறுவனப் பண்பாடாக மாற்றுவது. வியாபாரம் நடத்த திட்டமிட்ட போது, ஒப்பந்தம் வரைய அவருக்கு தெரியாது. ஆனால் நடிப்பு மற்றும் பாடுவதை விட எடை குறைப்பு மீது Zhang Yushan மேலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு, ஊட்டச்சத்து உணவு, சீனப் பாரம்பரிய மருத்துவ முறை, மேலை நாட்டு மருந்து, கருவி, உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகியவை இணைந்து உருவாகிய எடை குறைப்பு மாதிரியை அவர் முன்வைத்தார். ஹாங்காங் பெண்களிடையில் இது பரவலாக வரவேற்கப்பட்டது. வியாபாரம் நடத்துவதில் பல்வகை மோசமான நிலைமைகளை Zhang Yushan சந்தித்ததுண்டு. ஆனால், கெட்ட உணர்வை ஓரளவில் நீக்கிய பின் அவர் அழகான ஆடை அணிந்து வேலைக்குச் சென்று தன்னை ஊக்கப்படுத்திக் கொள்கிறார். அழகு பண்பாட்டுத் துறையில் ஈடுபடுவதால், நிறுவனத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கினால்தான் வாடிக்கையாளருக்கு வசதியான சேவையை வழங்க முடியும். சக பணியாளர்களும் சுமூகமாக பழகலாம் என்று Zhang Yushan தெளிவாக தெரிந்து கொண்டுள்ளார்.
Zhang Yushanனின் இரண்டாவது LOHAS மனநிலை: புகார் செய்வதற்கு பதிலாக நெருக்கடியை வாய்ப்பாக மாற்றுவது. 2003ஆம் ஆண்டு Xiu Shen Tang சந்தைப்பட தயார் செய்த போது சார்ஸ் நோய் அச்சுறுத்தலை சந்தித்தது. Zhang Yushan தன்னை, நோய் அச்சுறுத்தலை தவிர்க்க வீட்டில் தடுப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொண்ட ஒரு வாடிக்கையாளராக கற்பனை செய்தார். "முதலாவதாக, மருத்துவமனையைப் போல் எங்கள் எடைக் குறைப்பு மையத்தில் பல முறை நச்சு நீக்கினோம். தாய்மார்கள் குழந்தைகளைக் கொண்டு வந்தால் நாங்கள் குழந்தைகளைப் பராமரிக்காலம். வீட்டை விட எங்கள் மையம் மேலும் பாதுகாப்பாக இருக்கிறது. இரண்டாவதாக, எடைக் குறைப்பு பற்றிய
ஒளிநாடாவை தயாரித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தோம். பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடியே எடை குறைப்பில் ஈடுபடலாம். அதே வேளையில் எங்கள் மையம் மீதான அவர்களது ஆர்வமும் அவர்களுக்கு அதிகரிக்கும்" என்று அவர் கூறினார். இதற்குப் பின் Xiu Shen Tang அன்றாட வருமானத்தை நிலைநிறுத்தியுள்ளது மட்டுமல்ல, முன் கண்டிராத வளர்ச்சியையும் உயர்வையும் எட்டி, தடையின்றி சந்தைப்பட்டது. Zhang Yushan தாம் பெற்றுள்ள முன்னேற்றங்கள் நன்றியோடு நினைத்து, அறக்கொடை நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
|
|