60 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் சுமார் 80 விழுக்காட்டினர் எழுத்தறிவற்றவராக இருந்தனர். தற்போது, சீனா முழுவதிலும் 9 ஆண்டு கட்டாய கல்வி அமைப்புமுறை பரவலாகியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், சீனாவில் கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்ப இலட்சியம் மாபெரும் சாதனை பெற்றுள்ளது. தற்போது, சீனாவில் 15 வயதுக்கு மேலானவர்கள் சராசரியாக 8.5 ஆண்டு கல்வி பெற்றுள்ளனர். புதிதாக அதிகரிக்கும் தொழிலாளர்கள் சராசரியாக 11 ஆண்டு கல்வி பெற்றுள்ளனர். உயர் நிலை கல்வி பெற்று வேலை செய்வோரின் எண்ணிக்கை 8 கோடியே 20 இலட்சமாகும். இந்தத் துறைகளில், சீனா வளரும் நாடுகளின் முன்னணியில் உள்ளது என்று தெரிகின்றது. சீனா மனித வள ஆற்றல் மிக்க நாடாக மாறியுள்ளது என்று சீனக் கல்வித் துறை அமைச்சர் சோ ச்சி கூறினார். தவிர, விண்வெளி தொழில் நுட்பம், உயர் ஆற்றல் இயல்பியல் முதலிய முக்கிய அறிவியல் தொழில் நுட்ப துறைகளிலும் சீனா உலக முன்னேறிய தரமான சாதனைகள் பெற்றுள்ளது. 2020ம் ஆண்டுக்குள் சீனா புத்தாக்க தன்மை வாய்ந்த நாடாக மாற வேண்டும் என்று சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் வான் காங் தெரிவித்தார்.
|