• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-08 17:20:11    
கான் சூ மாநிலத்தில் உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல்

cri
கான் சூ மாநிலம் வடமேற்கு சீனாவின் பீடபூமி பிரதேசத்தில் அமைந்துள்ளது. சீனாவில் மிக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும். 20ஆம் நூற்றாண்டின் 90வது ஆண்டுகள் முதல் கான் சூ மாநில அரசு, சூரிய ஆற்றல் பயன்பாடு, பாலைவன மயமாக்க கட்டுப்பாடு முதலிய பயனுள்ள தொழில் நுட்பங்களைப் பெரிதும் பரவலாக்கி, உள்ளூர் உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது.

தா பிங் கிராமம், கான் சூ மாநிலத்தின் திங் சி நகரில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள சுமார் 100 விவசாயக் குடும்பங்கள் அனைத்திலும் சூரிய ஆற்றல் அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக, விவசாயிகள் எரி பொருட்களை வாங்கும் செலவைச் சிக்கனப்படுத்துவதுடன், மலைப் பிரதேசத்தில் மரம் மற்றும் செடிகளை வெட்டுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. கிராமத்துக்கு அருகிலான உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் பயன் தரும் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய ஆற்றல் அடுப்புகளை ஆராய்ந்து தயாரிக்கும் கான் சூ இயற்கை எரியாற்றல் ஆய்வகத்தின் பொறியியலாளர் jin ji zu கூறியதாவது

ஓரே அளவுடைய வெந்நீரைத் தயாரிப்பதற்கு, சூரிய ஆற்றல் அடுப்பை அல்லது சில நூறு வாட் அளவுடைய மின்னாற்றல் அடுப்பைப் பயன்படுத்தும் நேரம் சரி சம மாகும். ஆகையால், சூரிய ஆற்றல் அடுப்பு நடைமுறைக்கு ஏற்றது. சுற்றுச்சூழலுக்கு இது மாசுபாடு ஏற்படுத்தாது. அதேவேளையில், விலையும் மலிவு. ஒரு சூரிய அடுப்பின் விலை 180 யுவான் மட்டுமே. அதன் பயன்பாட்டு ஆயுள் 10 ஆண்டுகள். மனித ஆற்றல், எரிபொருள் செலவு முதலியவற்றைக் கணக்கிப்பார்த்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு இது குறைந்தது ஆயிரம் யுவானைச் சிக்கனப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

தற்போது, கான் சூ மாநிலத்திலுள்ள மூன்றில் இரண்டு பகுதி கிராமப்புறங்களில், சூரிய ஆற்றல் அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மாநிலத்தில் முழு ஆண்டிலும் 1700 மணி முதல் 3300 மணி நேரம் வரை சூரிய ஒளி வீசுகின்றது. சூரிய ஆற்றலின் மொத்த கதிரியக்க அளவு ஒரு சதுர மீட்டருக்கு 4800 முதல் 6400 மெக ஜூலாகும். செழிப்பான சூரிய ஆற்றல் வளம் கான் சூ மாநிலத்தின் தூய்மையான எரியாற்றல் ஆய்வு மற்றும் பயன்பாட்டுக்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கியது.

கான் சூ இயற்கை எரியாற்றல் வள ஆய்வகத்தின் மாதிரி தளத்தில், உயர் நிலை பொறியியலாளர் zhang lan ying அம்மையார் ஒரு முன்னேறிய எரியாற்றல் சிக்கனக் கட்டிடம் பற்றி அறிமுகப்படுத்தினார். சூரியனின் நேரடி கதிரியக்க ஆற்றலை இக்கட்டிடம் பயன்படுத்தி, துஷிக்தாஸச்சிஸ் வெப்பம், கோடையில் குறிர்ச்சி என்ற பயனை தர முடியும் என்று அவர் எடுத்துக் கூறினார். குறிப்பாக, இந்தக் கட்டிடத்தில் சூரிய ஆற்றலைச் சேகரிக்கும் சிக்கலான வசதியும், சுழற்சி எரியாற்றல் வசதியும் பொருத்தப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், கான் சூ மாநிலம் உள்ளிட்ட வடமேற்கு கிராமப்புறங்களில் இந்த ஆய்வகம் சுமார் 15 இலட்சம் சதுரமீட்டர் பரப்புடைய இத்தகைய கட்டிடங்களைக் கட்டியமைத்துள்ளது. Zhang lan ying அம்மையார் கூறியதாவது

வெப்ப வசதி இல்லாத இடங்களில், இத்தகைய சூரிய ஆற்றல் அறைகளில் 12 திகிரி சென்டிகிரேட் வெப்ப அடையலாம். மின்னாற்றல், எரியாற்றல் ஆகியவை தேவையில்லை. சொந்த கட்டிடத்தின் கட்டமைப்பால் இத்தகைய பயன் பெறப்படுகின்றது. எரியாற்றல் சிக்கன விகிதம் 65 விழுக்காட்டுக்கு மேலாகும். கடந்த சில ஆண்டுகளில் இது மிகப்பல வடமேற்கு பகுதி கிராமபுறங்களில் வாழ் விவசாயிகளின் வரவேற்பை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.