• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-08 17:20:24    
கோடைக்கால மாளிகை

cri

1873ம் ஆண்டு பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் தொங்ஷு வழங்கியதுதான் Yiheyuan கோடைக்கால மாளிகை. Yiheyuan என்றால் பேணிவளர்த்த இணக்கத்தின் பூங்கா என்று பொருள். முன்னதாக ஒரு பூங்காவாக இருந்த இடத்தை தன் பேரரசிக்கு அன்புப் பரிசாய் அளிக்கும் நோக்கில், சிறப்பாக வடிவமைத்து உருவாக்கினார் பேரரசர் தொங்ஷு. ச்சிங்யி பூங்காவாக இருந்த இடமே பின்னாளில் கோடைக்கால மாளிகையாக மாறியது. அருகேயுள்ள வான்ஷோ மலையிலிருந்து பார்க்கையில் கோடைக்கால மாளிகையினுள்ளே இருக்கும் குன்மிங் ஏரி, பீச் கனியின் வடிவத்தில் காணப்படும். கோடைக்கால மாளிகையினுள்ளே மையப்பகுதியில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தின் பக்கச்சுவர்களில் வவ்வாலின் இறக்கைகளை போன்ற அமைவுகள் காணப்படும். இதில் பீச் சீனாவில் நீடுவாழ் வாழ்க்கையின் சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன. இப்படி நீடுவாழ்க்கையும், மகிழ்ச்சியும் அடையாளங்களாக வெளிப்படும் அமைவில் கோடைக்கால மாளிகை காணப்படுவது தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது பேரரசி சிஷுவுக்காக பேரரசர் தொங்ஷு அப்படியான அமைவையும், வடிவத்தையும் உருவாக்கச் செய்தாரா?

லெய் திங்ச்சங் என்பவர்தான் இந்த கோடைக்கால மாளிகையின் தலைமை கட்டிடவியலாளர். ச்சிங்யி பூங்காவாக இருந்த இடத்தை மறுசீரமைத்து, புதிய வடிவத்தில் கோடைக்கால மாளிகையாக உருவாக்கித் தந்தவர் இந்த லெய் திங்ச்சங்தான். பேரரசி சிஷுவை மகிழ்ச்சிப்படுத்த, இந்த பூங்காவின் மறுசீரமைப்பில் ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூ எனப்படும் செல்வம், ஷோ எனப்படும் நீடுவாழ்க்கை ஆகிய கருத்துக்களை உட்புகுத்துமாறு தலைமை கட்டிடவியலாளர் லெய் திங்ச்சங் அறிவுறுத்தப்பட்டாராம்.

நீடுவாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியை கட்டியமைக்கச் செய்தார் லெய் திங்ச்சங். இந்த மலையின் மேலிருந்து ஏரியை பார்த்தால் பீச் கனியை போலத் தெரியும். கோடைக்கால மாளிகையினுள்ளே இருக்கும் குன்மிங் ஏரிதான் அது. அந்த ஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம். இந்த பாலத்துக்கு அருகே லெய் திங்ச்சங் ஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார். இந்த ஆமைகளும் நீடுவாழ்க்கையின் சின்னங்களாக கருதப்பட்டவையே. அவ்வாறே குன்மிங் ஏரியின் அருகேயுள்ள புத்த ஊதுவத்தி கோபுரத்தின் பக்கச் சுவர்களில் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும் ஃபு எனும் வவ்வாலின் இறக்கைகளது வடிவத்தில் அமைப்புகளை செய்தார் லெய் திங்ச்சங். இப்படி மங்கலகரமான சின்னங்களையும், செய்திகளையும் உள்ளடக்கியதாகவே வீடுகளும், கட்டிடங்களும் பண்டைய சீனாவில் வடிவமைக்கப்பட்டன.

வெள்ளத்தை அடக்க வெண்கலக் காளை

குன்மிங் ஏரியின் கரையில் ஒரு வெண்கல எருதுச் சிலை உண்டு. பேரரசர் ச்சியன்லொங்கின் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டது. வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த சிலை நிறுவப்பட்டதாம்.