• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-09 17:19:36    
யான் ஆனின் காகிதக் கத்தரிப்பு தொழில்

cri

ஜுலை திங்களில் யான் ஆனில் அடிக்கடி மழை பெய்கிறது. புரட்சிக்கு வித்திட்ட Zao Yuanனில் அமைந்துள்ள ஒரு சிறு மலை குகை எமது செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தது. அக்குகைக்குள் எளிமையான வசதிகள் இருக்கின்றன. ஆனால் அழகான காகிதக் கத்தரிப்பு படைப்புகள் சுவற்றில் நிறைய தொங்கவிடப்பட்டுள்ளன. வட Shaan Xiயின் புத்தாண்டு படங்கள், பெய்ஜிங் இசை நாடகத்தின் முக ஒப்பனை, பாரம்பரிய கதைகள், மனிதனின் பிறப்பு ஆண்டை குறிக்கும் 12 விலங்குகள் முதலியவற்றை இந்தப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குகையின் உரிமையாளர் Ma Guoyu அம்மையார் யான் ஆனைச் சேர்ந்த காகிதக் கத்தரிப்பு கலைஞராவார். அவர் மற்றும் வட Shaan Xiயின் காகிதக் கத்தரிப்பு பற்றிய கதை 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியுள்ளது.

"வட Shaan Xiயின் காகிதக் கத்தரிப்பு, கத்தரிக்கோலால் கத்தரிப்பதென்ற ஆதிகால முறையை நிலைநிறுத்துகிறது. ஆனால் அதன் உற்பத்தி அளவு அவ்வளவு அதிகமில்லை. சந்தையின் தேவையை நிறைவு செய்ய முடியாது" என்று Ma Guoyu அம்மையார் கூறினார்.

கடந்த சுமார் 100 ஆண்டுகளில், ஒதுக்குப்புறமான Shaan Xiயின் வட பகுதியில் போக்குவரத்து வசதியில்லாத காரணம், வெளிப்புறப் பண்பாடு நுழைவதற்கு கடினமாக இருந்தது. பண்டைக்கால பண்பாடு மற்றும் கலையை கிராமியப் பெண்கள் கையேற்று, தலைமுறை தலைமுறையாக தமது சந்ததியனருக்கு கற்றுக் கொடுக்கின்றனர். வட Shaan Xiயின் காகிதக் கத்தரிப்பு எளிமையாகவும் தெளிவாகவும் அமைந்து, நாட்டுப்புற நறுமணத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

பழமை வாய்ந்த இந்தக் கலை தற்போது விரைவாக வளர்ந்து வருகிறது. தலைசிறந்த உள்ளூர் கலைஞர்கள் பலர் லோயிஸ் பீடபூமியிலிருந்து வெளியேறி, நாட்டின் இதர இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று, வட Shaan Xiயின் காகிதக் கத்தரிப்பு பற்றி அறிமுகப்படுத்தியுள்ளனர். காகிதக் கத்தரிப்பின் புகழை உயர்த்துவதோடு, தங்களது வருமானத்தையும் பெருமளவில் அதிகரித்துள்ளனர். வெளியூரில் பணிபுரிந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் புதிய கருத்துக்களையும் மாதிரியையும் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அவர்களில் சிலர் தமது வீட்டுக்கு அருகில் சிறிய அலுவலகம் அல்லது காகிதக் கத்தரிப்பு அகத்தை நடத்தி, நல்ல வருமானம் பெற்றுள்ளனர்.

ஆனால் முறைமையாக்கப்படாத அலுவல் மாதிரியின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. தற்போது யான் ஆனின் காகிதக் கத்தரிப்புத் தொழில் மயமாக்க பாதையில் நடை போட்டு வருகிறது. சந்தைமயமாக்கமும் தொழில்மயமாக்க திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. யான் அன் நகரின் பண்பாட்டு ஆணையகத்தின் துணைத் தலைவர் Sun Wenfang அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது—

"தற்போது ஷாங்காய் மாநகரில், உலகப் பொருட்காட்சி பற்றிய பரப்புரைக்கான உருவப்படம் மற்றும் சித்திர வரைபடம், எங்கள் யான் ஆன் காகிதக் கத்தரிப்புப் படைப்புகளால் தயாரிக்கப்பட்டன. வசந்த விழாவின் போது ஷாங்காயின் மாடு ஆண்டுக்கான வாழ்த்து சித்திர வரைபட திரைப்படமும், யான் ஆன் காகிதக் கத்தரிப்பு படைப்புகளால் தயாரிக்கப்பட்டதே. தொடர்பான நிறுவனம் எங்கள் காகிதக் கத்தரிப்பை உண்மையில் விரும்பியதால் எங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டது" என்றார் Sun Wenfang அம்மையார்.

யான் ஆன் காகிதக் கத்தரிப்பின் தொழில் மயமாக்கத்தில் இது வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். உள்ளூர் அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்பதிவு செய்து சந்தை விற்பனைக்கு பொறுப்பேற்பதால், காகிதக் கத்தரிப்பு கலைஞர்கள் கவலையின்றி படைப்புகளை தயாரிக்கலாம். இதனால் காகிதக் கத்தரிப்பு படைப்பு பெரும் வணிக மதிப்பு கொண்ட பண்பாட்டு உற்பத்திப் பொருளாக மாறியுள்ளது. யான் ஆன் காகிதக் கத்தரிப்பின் பெரும் சந்தை மதிப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.