• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-09 10:16:03    
ஒரு விரல் தத்துவம்

cri

அரசாங்கப் பணிக்கான தேர்வெழுதி, அரச அதிகாரிகளாக மாறிவிடவேண்டும் என்ற ஆவலோடு தலைநகரான பெய்ஜிங்கை நோக்கி, மூன்று கற்றறிந்த இளைஞர்கள் பயணமாயினர். அவர்கள் செல்லும் வழியே மிக அழகான இயற்கை எழில் கொஞ்சும் மலை ஒன்று இருந்தது. அங்கே ஒரு குறி சொல்லும் சோதிடன் வாழ்ந்து வந்தான். எதிர்காலத்தை அறியும் ஆவல் மனிதனின் புலன்கள் விழித்து, பகுத்தறியும் அறிவுக்கண் திறந்தது முதலே நின்று எரியும் தீ போல் கனன்றுகொண்டுதான இருக்கிறது அல்லவா? ஆக இந்த மூன்று அறிவாளர்களுக்கும் அந்த ஆவல் ஏற்படத்தான் செய்தது. எனவே, தாங்கள் எழுதப்போகும் அரசாங்கப் பணிக்கான தேர்வின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில், அந்த மலையில் வாழ்ந்த சோதிடனை சென்று சந்தித்தனர்.


தாங்கள் பெய்ஜிங்கிற்கு செல்லும் நோக்கத்தை சோதிடனிடம் கூறி, தேர்வு தங்களுக்கு சாதகமாக அமையுமா? வெற்றி கிட்டுமா என்றறிய விரும்புவதாக கோரினர். இந்த மூன்று அறிவாளர்களின் ஆவலை புரிந்துகொண்ட சோதிடன், அவர்கள் மூவரது பிறந்தநாள், நேரம் ஆகியவற்றை விசாரித்து விட்டு, சற்று நேரம் அமைதி காத்தபின், வாய் திறந்து வார்த்தைகள் ஏதும் சொல்லாது, தன் ஒரு விரலை மற்று உயர்த்தி காட்டினான். தன் சுட்டுவிரலை வான்நோக்கி உயர்த்திய நிலையில் அமைதியுடன் அமர்ந்திருந்த சோதிடன், என்ன சொல்லவருகிறான், அந்த ஒரு விரலுக்கான பொருள் என்ன என்று அறிவாளர்கள் மூவருக்கும் குழப்பம். எனவே அந்த சோதிடனை தங்களுக்கு விளக்கமாக பதில் கூறும்படி கோரினர். ஆனால் அந்த சோதிடனோ, "உங்கள் மூவருக்குமான எதிர்காலத் திட்டத்தை விண்ணுலகம் எவ்வாறு எழுதியிருக்கிறது என்பதை என்னால் இதற்கு மேல் தெளிவாக்க முடியாது. அதற்கு எனக்கு உரிமை இல்லை. அது எனக்குரிய கடமையல்ல. விரைவில் உங்களுக்கு இது விளங்கும். என்னை நீங்கள் மூவரும் மன்னிக்கவேண்டும்" என்றானாம்.


அந்த மூன்று பேரும் வேறு வழியில்லாமல், ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். அவர்கள் சென்றபின் அன்று மாலை இந்த சோதிடனின் மாணவன் ஒருவன் காலையில் நடந்தை பற்றி தன் ஆசானிடம் கேட்டான். "ஆசானே, உண்மையில் நீங்கள் ஒரு விரலை மேலே நீட்டி அந்த மூன்று பேருக்கும் சொன்ன கருத்துதான் என்ன? கொஞ்சம் விளக்கம் செய்யுங்களேன்?" என்று மாணவன் கேட்க, சீடனே, அது மிகவும் எளிதானதுதான்.
"நான் ஒரு விரலை மட்டும் நீட்டியதால், அந்த மூன்று பேரில் ஒருவர் தேர்வி வெற்றி பெற்றால், நான் ஒருவர் மட்டும் தேறுவதாக சொன்னதாக அவர்கள் உணர்ந்துகொள்வர். ஒருவேளை இரண்டு பேர் தேறி ஒருவர் தோல்வியுற்றால், என் ஒரு விரலுக்கு பொருள், ஒருவர் தோலிவியுறுவார் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். ஒருவேளை மூன்று பேரும் தேர்வி வெற்றிபெற்றால், அனைவரும் ஒன்றாக தேறுவார்கள் என்னதையே என் ஒரு விரல் உணர்த்தியதாக பொருள்கொள்வர். அவ்வாறே மூன்று பேருமே தோல்வியுற்றால், என் ஒரு விரல் அவர்கள் மூவரும் ஒன்றாக தோல்வியுறுவர் என்று பொருள்பட்டதாக அவர்கள் புரிந்துகொள்வர். ஆக எது நிகழ்ந்தாலும் என் ஒரு விரலுக்கு பொருள் அதுவாகவே மாறிவிடும்" என்றானாம் மதிநுட்பம் கொண்ட சோதிடன்.