சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையத்தைச் சேர்ந்த சீனப் பொருளாதார நிலைமைக்கான கண்காணிப்பு மையம் 10ம் நாள் பெய்ஜிங்கில் சீன நகர வளர்ச்சி பற்றிய ஆய்வின் முடிவை வெளியிட்டது. பெய்ஜிங், ஷாங்காய், தியென்சின் உள்ளிட்ட 60 நகரங்கள், நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில் சீன நகர வளர்ச்சியின் மாதிரி நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த 60 நகரங்களின் பொருளாதார வளர்ச்சி நிலைமை, நபர்வாரி வருமானம் ஆகியவை, சீனாவின் சராசரி நிலையை விட உயர்வாக இருக்கின்றன. அதன் நகரமயமாக்க நிலை சீனாவில் முன்னணியில் இருக்கின்றது என்று இவ்வாய்வின் முடிவு காட்டியது.
|