• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-11 09:32:53    
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மருத்துவர் Gu Hong

cri
பெய்ஜிங் An Zhen மருத்துவமனையின் குழந்தை இதய நோய் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் Gu Hong, மேற்படிப்புக்காக ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்குச் சென்று நல்லபடி கற்றுத் தேர்ந்தார். 2004ஆம் ஆண்டு வெளிநாட்டிலான பணி மற்றும் வாழ்க்கை வசதிகளைக் கைவிட்டு பெய்ஜிங் திரும்பினார். அவர் நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கி 7 முறை திபெத்துக்குச் சென்று, அங்குள்ள சுமார் பத்தாயிரம் குழந்தைகளுக்கு இதய பரிசோதனையை மேற்கொண்டு, 160க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். திபெத் மக்களுடன் அவர் ஆழ்ந்த நட்புறவை உருவாக்கியுள்ளார்.

கடந்த டிசம்பர் திங்கள் மருத்துவர் Gu Hong திபெத் பெண் குழந்தை Tenzin Chonyiக்கு இதய அறுவை சிகிச்சை செய்தார். இவ்வாண்டு ஜுன் திங்கள் 10 வயதான அச்சிறுமி தாயுடன் சேர்ந்து பெய்ஜிங் An Zhen மருத்துவமனைக்கு வந்தார். விபரமான பரிசோதனைக்குப் பின், இந்த நோயை வேரோடு தீர்ப்பதற்காக, 6 திங்களுக்குப் பின் அவளுக்கு மேலும் ஒரு முறை அறுவை சிகிச்சை அளிப்பதென Gu Hong முடிவு செய்தார். Tenzin Chonyiயின் தாய் Lhamo மருத்துவர் Gu Hong மீது நன்றியுணர்வு கொண்டார்.
"மிகச் சிறந்த மருத்துவ நுட்பம் கொண்ட மருத்துவர் Guவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். முன்பு Tenzin Chonyi ஓரிரு அடி எடுத்த பின் தொடர்ந்து நடக்க முடியாது. அவளை முதுகில் சுமந்து செல்ல வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவள் தானாகவே விளையாடி மகிழ்கிறாள்" என்று Lhamo கூறினார்.

Tenzin Chonyi மருத்துவர் Gu Hongகினால் பெய்ஜிங்கிற்கு அழைக்கப்பட்ட 140க்கு மேற்பட்ட திபெத் குழந்தைகளில் ஒருவர். உயிர் வாயு பற்றாக்குறையினால், திபெத் பிரதேசத்தில் பிறவிக் குறைபாடாக இதய நோய் ஏற்பட்ட விகிதம் ஆயிரத்தில் 18க்கு அதிகம்.
2004ஆம் ஆண்டு Gu Hong பெய்ஜிங் An Zhen மருத்துவமனைக்கு திரும்பினார். பின்னர், பிறவிக் குறைபாடாக இதய நோய்வாய்ப்பட்ட திபெத் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அவர் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். இன்றுவரை 7 முறை திபெத்துக்குச் சென்ற அவர் சுமார் பத்தாயிரம் திபெத் குழந்தைகளுக்கு இதய பரிசோதனையை மேற்கொண்டு, அறுவை சிகிச்சைக்காக 140க்கு அதிகமான குழந்தைகளை பெய்ஜிங்கிற்கு கொண்டு வந்தார். மேலும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Ren Min மருத்துவமனையில் இதய நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு பல முறை அறுவை சிகிச்சை அளித்துள்ளார். பரபரப்பான சூழலில், ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.

கடினமான அறுவை சிகிச்சைக்கு பொறுப்புணர்வு தவிர சிறந்த நுட்பமும் தேவைப்படுகிறது. முனைவர் பட்டத்துக்காக An Zhen மருத்துவமனையிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற Gu Hong, ஜப்பானிய குழந்தை இதய நோய் சங்கம் வழங்கிய இளைஞர் ஆய்வு விருதை 2 முறை பெற்றார். இவ்விருதை பெற்ற முதலாவது வெளிநாட்டவராகவும் பெண்மணியாகவும் அவர் திகழ்கிறார். ஜப்பானில் முனைவர் பட்டம் பெற்ற Gu Hong, முனைவர் பட்டத்துக்கு பிந்தைய ஆய்வுக்காக அமெரிக்காவுக்குச் சென்றார்.
நாடு திரும்பிய பின், நிபுணர்கள் பலருக்கு தலைமை தாங்கி அவர் திபெத்துக்குச் சென்றார். காற்று குறைவு நோயினால் ஏற்பட்ட உடல் நலப் பிரச்சினையைச் சமாளிக்க, திபெத் குழந்தைகளுக்கு இதய பரிசோதனை மேற்கொண்டு அறுவை சிகிச்சை அளிப்பதென்ற தொண்டர் நடவடிக்கையில் அவர் ஊன்றி நின்று வருகிறார்.