சீனா 60 ஆண்டுகளில் உருவாக்கிய சாதனைகள்
cri
உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னணில், இவ்வாண்டின் முதல் அரையாண்டில் திங்களில், சீன பொருளாதாரம் 7.1 விழுக்காட்டு அதிகரிப்பு வேகத்தை நிலைநிறுத்தியுள்ளது. சீனா அற்புதமான வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடந்த சில திங்கள்காலத்தில், உலகின் 10 பொருளாதார வல்லரசுகளில் வலுவான அதிகரிப்பை மீட்ட ஒரே ஒரு நாடாக சீனா மாறியது. உலகின் இதர நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விலகுவதற்கு சீனா உதவியளிக்கலாம் என்று சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். தனக்கு உரிய மற்றும் சரியான வளர்ச்சி பாதைகளை கண்டறிவதால், சீனா வெற்றிபெற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் வளர்ச்சியை மீள்ளாய்வு செய்தால், சீன பாதை மற்றும் சீன எழுச்சி, சீனா இந்த மாபெரும் சாதனைகளை பெற்றதற்கு முக்கிய காரணங்களாகும்.
1949ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள், நவ சீனா நிறுவப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளால போரினால், சீன பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்திருந்தது. உலகில் மிகவும் வறிய நாடுகளின் பட்டியலில் சீனாவும் ஒன்றாக இருந்தது. தவிர, அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் சீனாவின் மேல் தடை நடவடிக்கைகளை செயல்படுத்தின. சீன மக்கள் குடியரசை ஏற்றுகொள்ள அமெரிக்கா மறுத்ததோடு, சீனாவை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இடம்பெற விடவில்லை. ஆனால், பல்வகை தடை நடவடிக்கைகளையும் எதிர் கொண்ட சீனா வெளிநாடுகளிடத்தில் சரணடையவில்லை. அரசியலில், ஆர்த்தெழுந்து எதிர்த்துப்போராடி, மேலை நாடுகளின் மறைமுக எதிர்ப்பு திட்டங்களை சீர்குலைத்துள்ளது. பொருளாதாரத்தில், தற்சார்புடைமையில் ஊன்றி நின்று, மனம் ஒருமித்து கடினமாக உழைந்துள்ளது. 3 ஆண்டுகளிலேயே, சீனத் தேசிய பொருளாதாரம் மீட்கப்பட்டது. 1953ம் ஆண்டு முதல், சீனா முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்தியது. சீன சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் புதிய நிலையை இது உருவாக்கியது. தற்போது, சீனா 11வது ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துகின்றது.
முதலாவது 5 ஆண்டு திட்டத்தின் போது, சீனாவின் முதல் பார வண்டி உற்பத்தி தொழில் நிறுவானமான Chang Chun வாகன தயாரிப்புத் தொழிற்சாலை உற்பத்தியில் இறங்கியது. முதல் விமான தயாரிப்புத் தொழிற்சாலை சீனாவின் முதல் விமானத்தை உற்பத்தி செய்தது. சீனாவின் முதல் இயந்திர தயாரிப்புத் தொழிற்சாலையான Shen Yang இயந்திர தயாரிப்பு தொழிற்சாலையும் உற்பத்தியில் இறங்கியது. தவிர, போக்குவரத்து, மென்ரகத் தொழிற்துறை, வேளாண் துறை, வணிகம், பண்பாட்டு கல்வி ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. மக்கள் வாழ்க்கை தரம் அதிகயளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட துவக்கத்தில், சீனாவில் பல்வகை ஆக்கப்பணிகள் சோஷலிச நாடான முன்னாள் சோவியத் யூனியனின் மாபெரும் உதவிகளை பெற்றன. ஆனால், சீன-சோவியத் யூனியன் உறவு மோசமாகியதுடனும், இரு தரப்பு எல்லையில் நிகழ்ந்த மோதலாலும், சிக்கல் வாய்ந்த சர்வதேச சுற்றுச்சூழலை சீனா எதிர்நோக்கியது. அத்துடன், சீனாவில், பண்பாட்டுப் புரட்சியால் ஏற்பட்ட பாதிப்பில், தேசியப் பொருளாதார வளர்ச்சி கடுமையாக தடைபட்டது. இந்த நிலைமையில், சுய வலிமைக்காக விடாமுயற்சி செய்வதென்ற தேசிய எழுச்சியை சீனா தொடர்ந்து வெளிகொணர்ந்ள்ளது. இன்னல் மிக்க நிலைமையில், அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு, தயாரித்ததோடு செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 1964ம் ஆண்டு, சீனாவின் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
1967ம் ஆண்டு, சீனாவின் முதல் ஹைடிரஜன் குண்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 1970ம் ஆண்டு, சீனாவின் முதல் செயற்கைக் கோளான Dong Fang Hong வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தங்களது ஆற்றல் மூலம், இரு குண்டுகள் ஒரு செயற்கைக் கோள் ஆகியவற்றின் பணியை சீனா நிறைவேற்றியது. இன்னல் மிக்க நிலைமையில், சீன அறிவியலாளர்கள் பல முக்கிய அறிவியல் தொழில் நுட்ப இன்னல்களை தீர்த்து, பல இலட்சம் வசதிகள், அளவு கருவிகள், அளவை மானிகள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர். பாதுகாப்பு மற்றும் விண்வெளிப் பயணத் துறையின் மிகவும் நவீனமான அறிவியல் தொழில் நுட்பத்தை சீனா தானாகவே கற்றுத்தேர்ந்துள்ளது. தவிர, கடந்த நூற்றாண்டின் 60, 70ம் ஆண்டுகளில், அறிவியல் தொழில் நுட்ப துறையில், சீனா பல அற்புதங்களை உருவாக்கியுள்ளது. 1965ம் ஆண்டு, செயற்கை இன் அலீனை சீன அறிவியலாளர்கள் முதல் முறையாக நனவாக்கினர். Yuan Longping உள்ளிட்ட அறிவியலாளரின் சளையாத முயற்சிகள் மூலம், கலப்பின நெல் விதை
இனக்கத் துறையில் பயிரிடுவதில், சர்வதேச அளவில் முன்னணி நிலையை சீனா பெற்றுள்ளது. 1976ம் ஆண்டு முதல், சீனாவில், கலப்பின நெல் விதை தொழில் நுட்பம் பெருமளவு பரப்பில் பரவல் செய்யப்பட்டது. 1979ம் ஆண்டு, சீனாவின் முதலாவது வேளாண் தொழில் நுட்ப அறிவுசார் காப்புரிமையான நெல் விதை தொழில் அமெரிக்காவுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் வலுப்படுத்தப்படுவதுடன், மேலை நாடுகளின் அரசியல் தடை நடவடிக்கைகளை சீனா முறியடித்துள்ளது. 1971ம் ஆண்டு, ஐ.நாவில் சீனாவின் சட்டப்பூர்வ தகுநிலை மீட்கப்பட்டது. 1972ம் ஆண்டு, சீனாவும் ஜப்பானும் தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கின. அத்துடன், அமெரிக்க அரசுத் தலைவர் நீக்சன் சீனாவில் பயணம் மேற்கொண்டார். இது சீன-அமெரிக்க தூதாண்மை உறவை இயல்பாக்கியது.
1949ம் ஆண்டு முதல், 1978ம் ஆண்டு வரை, சுய வலிமைக்காக விடா முயற்சி மற்றும் மனம் ஒருமித்து கடினமாக உழைப்பதென்ற தேசிய எழுச்சியுடன், வெளிநாட்டு தடை நடவடிக்கைகளை சீனா படிப்படியாக முறியடித்தது. இதன் மூலம் உலகில் செழுமையான ஒட்டுமொத்த ஆற்றல் கொண்ட முக்கிய நாடாக சீனா மாறியது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளில், சீன பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதார தொழில் நுட்ப அடிப்படையை இது உருவாக்கியுள்ளது. 1978ம் ஆண்டு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட பின், சீன நாட்டு நிலைமை வளர்ச்சிக்கு பொருந்திய பாதையாக விளங்கியதை சீனா மேலும் நிர்ணயித்துள்ளது. சுய வலிமைக்காக விடாமுயற்சி மற்றும் மனம் ஒருமித்து கடினமாக உழைப்பதென்ற தேசிய எழுச்சியை சீன மக்கள் கொள்வதை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.
60 ஆண்டுகளால வளர்ச்சியால், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 1950ம் ஆண்டின் 6 ஆயிரத்து 830 கோடி யுவானிலிருந்து, 2008ம் ஆண்டு 30 இலட்சம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. நபர்வாரி வருமானம், 1950ம் ஆண்டில் இருந்த 77 யுவானிலிருந்து, 2008ம் ஆண்டில் இருந்த 15 ஆயிரத்து 500 யுவானாக அதிகரித்துள்ளது. சுய வலிமைக்கா விடாமுயற்சி சீன தேசத்தின் எழுச்சியும் ஆற்றலின் தோற்றுவாயுமாகும். இந்த எழுச்சியுடன், மேலை நாடுகளின் தடை நடவடிக்கைகளை சீனா முறியடித்து, சமூக மற்றும் பொருளாதார ஆக்கப்பணியில் சந்தித்த பல சிரமங்களை தோற்கடித்து, உலகின் கவனத்தை ஈர்க்கும் அற்புதத்தை உருவாக்கியுள்ளது.
|
|