வாணி – வணக்கம், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மிகழ்ச்சி. க்ளீட்டஸ் – வணக்கம், இன்று வாணி க்ளீட்டஸ் இருவரும் உங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். வாணி – இன்று மீன் இறைச்சி நிறைந்த ஒரு உணவு வகை பற்றி கூறுகின்றோம். க்ளீட்டஸ் – முந்தைய நிகழ்ச்சிகளில் மீன் இறைச்சி இடம்பெறும் பல உணவு வகைகள் பற்றி அறிமுகப்படுத்தினோம். வாணி – ஆமாம். ஆனால், இன்றைய உணவு வகையில் இன்னொரு முக்கிய உணவுப் பொருள் இடம்பெறும். க்ளீட்டஸ் – ஓ, என்னது? வாணி – beer தான். க்ளீட்டஸ் – சீனாவில் கோடைக்காலத்தில் பலர் சில்லென beer குடிக்க விரும்புகின்றனர் என்று கண்டறிந்தேன். வாணி – ஆமாம். சீன சான் துங் மானிலத்தின் சிங் தாவ் beer மிகவும் புகழ்பெற்றது. இன்றைய உணவு வகையில் இதனைப் பயன்படுத்துகின்றோம். க்ளீட்டஸ் – ஓ, சிங் தாவ் நகர். இது பற்றி எனக்கு தெரியும். சென்னை நகரை போல் இதுவும் ஒரு கடலோர நகரமாகும். அங்குள்ள கடல் நீர் தெளிவானது. கடந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் படகு போட்டிகள் இந்நகரில் நடைபெற்றன. வாணி – ஆமாம். அழகான நகரம் இது. க்ளீட்டஸ் – சரி, தேவையான பொருட்களை எடுத்து கூறுங்கள். வாணி – கூறுகின்றேன்.
ஓன்றரை கிலோ எடையுடைய மீன் 1
அரைத்த இஞ்சி போதிய அளவு ஒரு முட்டையின் வெள்ளை கரு உலர்ந்த தக்காளி மாவு 2 தேக்கரண்டி சமையல் மது 1 தேக்கரண்டி சோயா சாஸ் 1 தேக்கரண்டி பூண்டு பல் சில வெங்காயம் காய்ந்த சிவப்பு மிளகாய் சிங் தாவ் BEER 1 CAN காடி 2 தேக்கரண்டி கற்கண்டு போதிய அளவு க்ளீட்டஸ் – வழக்கம் போல, மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் செதில்களை முற்றிலும் நீக்க வேண்டும். வயிற்றுள்ளவற்றையும் நீக்க வேண்டும். பிறகு, மீனை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணி – மீன் துண்டுகளை இஞ்சித்தூள், முட்டையின் வெள்ளை கரு, உலர்ந்த தக்காளி மாவு, சமையல் மது, சோயா சாஸ் ஆகியவற்றுடன் சேர்த்து கிளற வேண்டும். பிறகு, இந்த மீன் துண்டுகளை குளிர் பெட்டியில் சுமார் அரை மணி நேரம் வையுங்கள்.
க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் சமையல் எண்ணெயை ஊற்றவும், பிறகு, பூண்டு பற்கள், இஞ்சித்தூள், வெங்காயம், காய்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை கொட்டி, வதக்கவும். வாணி – அடுத்து, மீன் துண்டுகளையும் வாணலியில் கொட்டவும், பெரிய சூட்டில் வறுக்கவும். மீன் இறைச்சி முற்றிலும் வெள்ளை நிறமாக மாறிய பின், BEERஐ வாணலியில் ஊற்றலாம். மிதமான சூட்டில் மெதுவாக வேகவிடுங்கள். க்ளீட்டஸ் – 15 நிமிடங்களுக்குப் பின், சுவையான மணம் வரும். இப்போது, வாணலியில் காடி, சோயா சாஸ், கற்கண்டு ஆகியவற்றை வாணலியில் சேர்க்கலாம். வாணி – சொந்த விருப்பத்தின் படி, இந்த உணவு வகைகளில் தக்காளி அல்லது பச்சை மிளகாய் பொடிகளை சேர்க்கலாம்.
க்ளீட்டஸ் – அன்பு நேயர்களே, இன்றைய beer கலந்த மீன் வறுவல் தயார். இது உணவு வகைகளின் பல்வேறு தயாரிப்பு வழிமுறைகளில் ஒன்று. புதுப்பது வகைகளை எமது நேயர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இன்றைய உணவு வகையை அறிமுகப்படுத்தினோம்.
|