இவ்வாண்டில் இதுவரை சீனாவில் வணிகச் சின்னங்களுக்கான பதிவு மற்றும் பரிசீலனைத் தொகை, 10 இலட்சத்து 5 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது, சீனாவில் வணிகச் சின்னங்களின் பதிவு மற்றும் பரிசீலனைத் தொகையும், வணிகச் சின்னங்களின் எண்ணிக்கையும், உலகில் முதலிடம் வகிக்கின்றன. 16ம் நாள், சீனத் தேசிய தொழில்துறை மற்றும் வணிகத் துறை ஆணையம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் கிடைத்தது.
வணிகச் சின்னம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பில் முக்கிய பகுதியாகும். 1979ம் ஆண்டு, சீனாவில் வணிகச் சின்னம் ஒருங்கிணைந்த முறையில் பதிவு செய்வது மீட்கப்பட்டது முதல், சீனாவின் வணிகச் சின்னத் துறை, பெரிதும் வளர்ந்துள்ளது. குறிப்பாக 2002 முதல் 2008ம் ஆண்டு வரையான காலத்தில், சீனாவில் வணிகச் சின்னங்களின் பதிவுத் தொகை, உலகில் முதலிடம் வகித்து வருகிறது என்று சீனத் தேசிய தொழில்துறை மற்றும் வணிகத் துறை ஆணையத்தின் தலைவர் லிசியன்சாங் 16ம் நாள் அறிமுகப்படுத்தினார்.
|