• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-16 09:51:41    
அடிமையும், ஆட்டுத்தோலும்

cri

ச்சின் நாட்டின் கோமகன் மு, ஜின் நாட்டு இளவரசியை மணம் முடித்தார். அக்காலத்தில் சீர்வரிசையாக அல்லது வரதட்சணையாக பொன் பொருள் நிலம் மட்டுமல்லாது அடிமைகளும் சேர்த்து வழங்கப்பட்டனர். அப்படி சீர்வரிசையாக வழங்கப்பட்ட ஓர் அடிமைதான் பாய் லீஷி. இந்த பாய் லீஷி ஒரு காலத்தில் யு என்ற நாட்டின் அரசில் அமைச்சராக பணிபுரிந்தவன். யு நாட்டை ஜின் நாடு கைப்பற்றியபோது, ஜின் நாட்டு அரசனின் அடிமையாக்கப்பட்டான் பாய் லீஷி. ஆக திருமண சீர்வரிசையில் ஒரு பொருளாக ச்சின் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பாய் லீஷி, வழியில் தப்பியோடிவிட்டான். ச்சின் நாட்டுக்கு செல்லும் வழியில் தப்பிய பாய் லீஷி ச்சூ நாட்டின் எல்லைக்குள்ளாக உளவாளி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, கால்நடைகளை மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.
மறுபுறத்தில் தனக்கு வந்த சீர்வரிசை பொருட்களை சரிபார்த்துக்கொண்டிருந்த கோமகன் மு, அடிமை பாய் லீஷி அங்கே இல்லாததை உணர்ந்தார். அடிமை பாய் லீஷியை பற்றி, சீர்வரிசையை பாதுகாத்து கொண்டு வந்து சேர்த்த பாதுகாவலர்களிடம் விசாரித்தபோது, நடந்ததைச் சொன்ன பாதுகாவல்ர்கள், பாய் லீஷி ஒரு திறமையாளன், நம்பிக்கைக்குரியவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்றும் கூறினர்.


அதன் பின் பாய் லீஷியை பற்றி விசாரிக்கவும், எங்கே இருக்கிறான் என்று கண்டறியவும் ஆள் அனுப்பினார் கோமகன் மு. சில நாட்கள் கழித்து பாய் லீஷி ஓரிடத்தில் மாடு மேய்த்துக்கொண்ட்ருக்கும் தகவல் வந்து சேர்ந்தது. திறமையான பாய் லீஷியை மீட்க முடிவெடுத்தார் கோமகன் மு. எனவே பாய் லீஷியை மீட்க ச்சு நாட்டு அரசனுக்கு மிகவும் பெறுமதியுள்ள அன்பளிப்புப் பொருட்களை கொண்டு செல்ல தயாரானார். ஆனால் அவரது அமைச்சரான குங்சுன் ஷி கோமகனை தடுத்தார். "ச்சு நாட்டு அரசன் நீங்கள் ஓர் அடிமைக்காக இவ்வளவு பெறுமதியுள்ள பொருட்களை கொடுத்து மீட்க விரும்புகிறீர்கள் என்பதை கண்டால், சந்தேகம் கொள்வான். பாய் லீஷி சாதாரணமானவன் அல்ல என்பதை உணர்ந்துகொள்வான். பிறகு அவனை ச்சு நாட்டிலேயே வைத்து, தனகே சேவை செய்யவும் அரசன் முடிவெடுப்பான். அதற்கு பிறகு உங்களுக்கு பாய் லீஷி எப்போது கிடைக்கமாட்டான்" என்றார் அமைச்சர் குங்சுன் ஷி. அமைச்சர் சொலவதில் உள்ள பொருளை உணர்ந்துகொண்ட கோமகன் மு, அக்காலத்தில் ஒரு அடிமைக்குரிய அடிப்படை விலையான 5 ஆட்டுத்தோலுடன் ச்சு நாட்டுக்கு ஒரு தூதனை அனுப்பி, ச்சூ நாட்டு அரசனிடம் பாய் லீஷி ச்சி நாட்டில் குற்றமிழைத்த வகையில் தேடப்படும் ஆள் எனவே ஆவனை தன்னோடு அனுப்பம்படி கேட்கச் சொன்னான்.
தூதனும் அவ்வாறே ச்சு நாட்டி அரசனிடம் சென்று கேட்க, தண்டிக்கப்படும் குற்றவாளிக்கு ஈடாக 5 ஆட்டுத்தோல் என்ற கணக்கில், பாய் லீஷியை தூதனிடம் ஒப்படைக்க உத்தரவிட்டான்.