புதிய உயர் தொழில் நுட்பத் துறையை, அரசின் அறிவியல் தொழில் நுட்ப ஒதுக்கீட்டின் முக்கிய அம்சமாக சீனா மாற்றும் என்று சீனத் துணை அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் Li Xueyong 17ம் நாள் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக, சீனாவின் புதிய உயர் தொழில் நுட்பத் தொழிற்துறை, விரைவாக வளர்ந்து வருகிறது. சீனாவின் புதிய உயர் தொழில் நுட்பத் தொழிற்துறை, இடர்ப்பாட்டு எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளதை, இந்தச் சர்வதேச நிதி நெருக்கடி காட்டியது. இனிமேல், தகவல், கடல், நானோ தொழில் நுட்பம் உள்ளிட்ட புதிய உயர் தொழில் நுட்பத் துறைகளை சீனா முக்கியமாக வளர்த்து, அவற்றிற்கான ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரிக்கும் என்று Li Xueyong கூறினார்.
|