• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-17 16:39:50    
லாசாவில் புகழ்பெற்ற கோயில்கள்

cri
சீன தென்மேற்குப் புகுதியின் சிங்ஹெய்-திபெத் பீடபூமியில் அமைந்துள்ள திபெத், தனிச்சிறப்பான இயற்கைக் காட்சிகள், மர்மமான மதப்பண்பாடுகள் ஆகிவற்றினால், உலகளவில் புகழ்பெற்று, பல்வேறு நாடுகளின் பயணிகளை ஈர்க்கின்றது. அதன் தலைநகரான லாசாவில் கோயில் குழுக்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று, லாசாவில் மிகவும் புகழ்பெற்ற Jokhang கோயில் மற்றும் Drepung கோயில் பற்றி கூறுகின்றோம்.

லாசா நகருக்கு வந்தடைவதுடன், அமைதியான சூழ்நிலையை உணர்ந்துகொள்ளலாம். சாலை எங்கெங்கும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த மதநம்பிக்கையாளர் பலர் காணப்படலாம். அவர்களின் அக உலகத்திலிருந்து வெளிப்படுத்தும் விசுவாசமான மற்றும் மனநிறைவைப் பார்த்தால், மிகுந்த மனமுருகினோம்.

கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்து திறந்து வைக்கப்படுவது ஆகியவற்றினால், பல்வேறு நாடுகளிலிருந்து திபெத்திற்கு வந்து சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. அனைத்து பயணியும் லாசாவுக்கு வரும் பிறகு, Jokhang கோயில் சென்று பார்க்கின்றோம். இந்த புனிதக் கோயிலை மேலும் நன்றாக பாதுகாக்க, நிர்வாக குழுவின் பணியாளர்கள் முழுமூச்சுடன் பாடுபட்டு வருகின்றனர். எமது

செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, பணியாளர் ஒருவர் கூறியதாவது:
கோயிலைப் பாதுகாப்பது, மத நம்பிக்கையாளர் மற்றும் பயணிகளின் தேவையை மனநிறைவு செய்வது ஆகியவற்றுக்காக, கடந்த ஆண்டின் ஜூலை முதல் நாள் முதல், பார்வையிடும் நேரத்தைச் சரிப்படுத்தினோம். காலையில், மதநம்பிக்கையாளர்களும், மாலையில், சுற்றுலாக் குழுக்களும் பார்வை யிடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
Jokhang கோயில் மற்றும் திபெத்தின் பாதுகாப்பு குறித்து, வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு கருத்துக்களைக் கொள்கின்றனர். பிரிட்டனின் பயணியர் பிஃரைஸ் கூறியதாவது:

பெய்ஜிங். ஷாங்காய் ஆகிய பெரிய நகரங்களை விட, இங்கு வான் நீலமாகவுள்ளது. சுற்றுச்சூழல் மிகவும் நன்றாக உள்ளது என்றார் அவர்.
லாசா வரும் பின், Drepung கோயில் சென்று பார்க்க வேண்டும். இது, லாசாவில் புகழ்பெற்ற மற்றொரு கோயிலாகும். திபெத் புத்த மதத்தைச் சேர்ந்த குரூ கிளையின் கோல் தான். லாசாவில் மிக பெரிய கோயிலாகவும், தலைமுறையான டாலாய் லாமா புத்தர்கள் வாழ்ந்த இடமாகவும் இருக்கிறது. லாசா மேற்கு புறநகரத்தின் ஹூசி மலையில் Drepung கோயில் கட்டியமைக்கப்பட்டது. அதன் வெள்ளை கட்டிடங்கள், தூரத்திலிருந்து பார்த்தால், அரிசி மலையைப் போன்றது. திபெத் மொழியில், Drepung என்பது, அரிசி மலை என்ற பொருள் தான்.

திபெத் சந்திர நாட்காட்டி படி, ஜுன் திங்கள் 30ம் நாளன்று, Drepung கோயிலில் நடைபெற்ற ஷெல்டன் விழா, குறிப்பிடத்தக்கது. சாலாவில் தனிச்சிறப்பான இவ்விழா துவக்க நாளின் காலையின் முதலாவது சூரிய ஒளியுடன், Drepung கோயிலில் வைக்கப்பட்ட மதிப்புக்குரிய பெரிய டாங்கா ஓவியம், ஹூசி மலையில் தொங்கப்பட்டது. மலையின் கீழ் காட்டிருந்த மத நம்பிக்கையாளர்கள் அனைவரும், புத்தரின் ஒளிவீசுத்தை உணர்ந்துகொள்ளலாம்.