சீனாவில் விளையும் தானிய அளவு 50 கோடி டன்னை தாண்டியது. நாட்டின் உணவு மற்றும் தானிய பாதுகாப்பு பயன் உள்ள ஆற்றலில் உள்ளது என்று சீன தேசிய புள்ளிவிபர ஆணையம் 18ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
உலகிலுள்ள மொத்த விளைநிலங்களில் பத்து விழுக்காட்டை கொண்டுள்ள சீனா உலக மக்கள் தொகையில் 20 விழுக்காட்டு மக்களுக்கு உணவு வழங்கும் அற்புதமான சாதனையை சீனா உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் விளைந்த தானிய அளவு 52 கோடியே 87 இலட்சத்து 10 ஆயிரம் டன்னை எட்டியது. 1949ம் ஆண்டில் இருந்ததை விட இது 3.7 மடங்கு அதிகரித்தது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
|