சீனா, சுதந்திரமான தற்சார்ப்பான அமைதித் தூதாண்மை கொள்கைகளைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதாக, சீன வெளியுறவு அமைச்சர் யாங்சியேச்சு தெரிவித்தார்.
19ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகால தூதாண்மைத் தத்துவங்கள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் தூதாண்மை மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. சர்வதேசச் சமூகத்தில், சீனாவின் தகுநிலை மாறி, பல்வேறு நாடுகளுடனான நட்பு ஒத்துழைப்பு பன்முகங்களிலும் வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை மேலும் செவ்வனே பேணிக்காத்து, சீரான சர்வதேசச் சூழ்நிலையையும் பயனுள்ள நிபந்தனையையும் சீனா உருவாக்கும். அரசியலில் மேலும் பெரிய செல்வாக்கு ஆற்றலையும், பொருளாதாரத்தில் மேலும் பெரிய போட்டியாற்றலையும் சீனா கொள்வதற்காக முயற்சி செய்யும் என்றும் யாங்சியேச்சு வலியுறுத்தினார்.
|