• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-19 20:24:52    
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுஅமர்வு

cri
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 17வது மத்திய கமிட்டியின் 4வது முழுஅமர்வு செப்டெம்பர் 18ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. சீனாவின் மக்கள் நாளேடு, இது பற்றி, 19ம் நாள் விமர்சனக் கட்டுரை வெளியிட்டது. மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிகரமாக நடைபோடுவதற்கான இயக்கு ஆற்றலாக இருக்கின்றன. அமைதிக் காலத்திலும் முழு கட்சியும் ஆபத்துக்கள் தொடர்பாக விழிப்புடன் இருந்து, புத்தாக்கத்தை நிலைநிறுத்தி, நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குத் தலைமைத் தாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.

நடப்பு முழு அமர்வு, சர்வதேச நிலைமை தொடர்ந்து ஆழமாகி வரும் சூழலில், சீனா, மேலும் வளரும் முக்கிய வாய்ப்புக் காலத்தில் இருக்கும் போது நடந்த முக்கிய கூட்டமாகும். புதிய நிலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்தி சீர்திருத்தும் சில முக்கிய பிரச்சினைகள் பற்றிய மத்திய கமிட்டியின் தீர்மானம், இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று இக்கட்டுரை கூறியது.