சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஹுசிந்தாவ், செப்டெம்பர் 20ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். மக்கள் கலந்தாய்வு இலட்சியத்தை, சீனத்தனிச்சிறப்புடைய சோஷியலிச இலட்சியத்தின் முக்கிய பகுதியாக கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பல கட்சிகள் ஒத்துழைத்து அரசியல் கலந்தாய்வு மேற்கொள்ளும் முக்கிய அமைப்பான சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, அதன் முக்கிய பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
|